பூவே பூச்சூட வா... அடியாத்தி.. எம்புட்டு வருஷமாச்சு.. அப்படியே இருக்காரே நதியா!

சென்னை : எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அழகு குறையாமல் மெழுகு சிலையாக இருக்கும் நடிகை நதியா.

நடிகை நதியா 80களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகை. இவருக்கென ரசிகர்கள் ஏராளம். நதியா மாடல் ஆடை, நதியா மாடல் அழகு சதானங்கள் என நதியா என்ற பெயரை சொல்லி அந்த காலத்தில் லாபம் அடைந்தவர்கள் பலர். அந்த அளவுக்கு நதியாவுக்கு ரசிகர்கள் இருந்தார்கள் அவரை வெகுவாக விரும்பினார்கள் .

கல்யாணத்திற்கு பிறகு நடிக்காத நதியா நீண்ட வருடத்திற்கு பிறகு 2004ல் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மாவாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட துவங்கினார். சமீபத்தில் கூட ஒரு விழாவின் போது ஜெயம் ரவியுடன் நடனமாடி அசத்தியிருந்தார் .

 நதியா நதியா

நதியா நதியா

நதியா பிரபலமடைந்த படம் என்றால் பூவே பூச்சூடவா படம் தான். இந்த படம் தான் நதியாவுக்கு முதல் தமிழ் படம். இந்த படத்தை பிரபல இயக்குனரான ஃபாசில் இயக்கியிருப்பார். இந்த படம் பெரிய வெற்றியை பெற தென்னிந்தியாவின் உச்ச நடிகையாக பத்து வருடங்கள் நடித்து அசத்தினார் . பூவே பூச்சூடவா படம் மிக முக்கியமான படமாகும்.

 பாசில் கேட்டதால்

பாசில் கேட்டதால்

இயக்குனர் ஃபாசிலின் உறவினர் தான் நதியாவாம். ஃபாசில் கேட்டதன் பேரில் நதியா அந்த படத்தில் நடித்தாராம். நடிகை நதியா பூவே பூச்சூடவா படத்தில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். உண்மையிலே நதியா அந்த வயதில் அந்த காலகட்டத்தில் அப்படிதான் இருந்தாராம் . நதியா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சில படங்களை காண செல்லும் போது திரையரங்கில் தனது பாடல் வந்ததும் மக்கள் காசை தூக்கிபோடுவதையும் மலர்களை தூக்கி போடுவதையும் பார்த்து மிகவும் ஆச்சரியபட்டு இருக்கிறேன்.

 ரசிகர்களின் அன்பு

ரசிகர்களின் அன்பு

ரசிகர்களின் அன்பை திரையரங்கில் தான் முதல் முறையாக பார்த்ததாக நதியா கூறினார் . நதியா ஒருமுறை உத்தரகாண்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த போது, அவசர வேலையாக வேறு ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போது தயாரிப்பாளர் படப்பிடிப்புக்காக ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டரை எடுத்து செல்லுங்கள் என சொல்ல ஹெலிகாப்டரின் மூலம் விமான நிலையத்தில் உடனடியாக இறக்கிவிட்டேன், இது தான் ராஜவாழ்கை நட்சத்திர வாழ்கை என அப்போது உணர்ந்தேன் என நதியா கூறினார் .

Recommended Video

தினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்
 ரசிகைகள் அதிகம்

ரசிகைகள் அதிகம்

நதியாவிற்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் அதிகம். அதிகபடியான பெண்கள் நதியாவின் ஸ்டெயில் நதியாவின் பாவனையை விரும்புவது வழக்கம் . நதியா அணிந்த மாடல் ஆபரணங்கள் எப்போது மார்கெட்டுக்கு வரும் என காத்திருந்த பெண்கள் ஏராளம். நதியா தற்போது தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X