நேர்ல பார்த்தா நல்லா கேட்டுடுவேன் : கோபத்தை அடக்க்கொண்ட நடியா சாங் சொல்வது யாரை?
சென்னை : பிக்பாஸ் பற்றி பேசாத மனிதர்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுற்கு பிரபலங்களும் பரபரப்புகளுமாய் அனல் பறக்கிறது. இணையங்களும் இதயங்களும் தற்போது இன்னும் பரபரப்பாக பேசுப்படுவடுவது நடியா சாங் பற்றியே. டிக்டாக் பிரபலம் பிக்பாஸ்-ல் மலேசியாவில் பிறந்து வளர்ந்த மலேசியா தமிழ்ப்பெண். மலேசியா- கோலாலம்பூரில் அம்பா என்ற இடத்தில் பிறந்து வளார்ந்தவர்.
தமிழ் மீது தீராக்காதல் கொண்டவர். டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் இன்ஸ்டாகிராம் மூலமா தன்னுடைய வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானார் .அரு ஜெயலட்சுமி என்பது நடியா சாங்-ன் நிஜப்பெயர்.
மிஸஸ் மலேசியாவில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரைக்கும் சென்றவர். 2009-ல் திருமணம் ஆனதாக, சாங் சூட் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தன் கணவருடன் கூட நிறைய டிக்டாக் வீடியோக்களும் செய்திருக்கிறார். ஆக்டர், மாடல், யூட்யூப்பர் என பன்முக திறமையாளர்.

அடைஞ்சி கெடந்தேன்
கேள்வி : சொந்த நாட்டுக்கு திரும்பும் நடியா சாங் மனநிலை இப்போ எப்படி இருக்கு?
பதில் : இன்னும் வெளி உலகத்துக்கே இன்னும் பாக்கல. ரொம்ப சில நாட்கள் தான் பிக்பாஸ் வீட்ல இருந்தேன். க்வாரண்டைன், பிக்பாஸ் வீடுன்னு அப்படியே அதில அடைஞ்சி கிடைந்ததால இன்னும் வெளி உலகத்த பாக்கல. இனிமேல் தான் எல்லாத்தாயும் பாக்கனும். பேசனும். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகுதான் என்ன ஆச்சு.. என்ன நடந்துருக்குன்னு ஒரு நிலைக்கு வர முடியும்.

அதெல்லாம் கண்டுக்கவே கூடாது
கேள்வி : உங்கள பத்தி நெகடிவ் கமெண்ட்ஸ் ல்லாம் நிறைய வந்துச்சே.
பதில் : இன்னைக்கு ஒரு நெகடிவ் இல்லாம., ஒரு பாசிட்டிவ் கிடைக்கவே கிடைக்காது. பிக்பாஸ் வீட்டுக்கு போறாங்களே இவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு ல்லாம் பேசுனாங்க. ஆனா, நம்ம தகுதிய உயர்த்திக்க தான் அந்த இடத்துக்கு போறோம். நமக்கு நாம உண்மையா இருந்தா போதும். இந்த இடத்துக்கு நான் வந்தது என்னோட சொந்த முயற்சிதான். வெளிய இருந்து நிறைய கமெண்ட்ஸ் வரும். ப்ரோமோவுல கமல் சொன்ன மாதிரி, விமர்சிக்கும் போது, முதல்ல நாம என்ன பொசிஷந்ல இருக்கோம்ன்னு நெனச்சி பாக்கனும்ன்னு சொல்லிருப்பாரு. அது எனக்கே சொன்ன மாதிரி இருந்துச்சு. அதனால அதபத்தி கண்டுக்கவே கூடாது.

லெஜண்ட் சொன்ன வார்த்தை
கேள்வி : ஒரு செலிப்ரிட்டியா எப்படி ஃபீல் பண்றீங்க?
பதில் : 14 நாள் இருந்தாலும் சரி, 40 நாள் இருந்தாலும் சரி. நான் அந்த இடத்துல நின்னு காட்டிட்டேன். கமல் ஒரு வார்த்த சொன்னாரு. இங்க இருக்குற எல்லாருமே வெற்றியாளர்கள்தான். செலிபிரிட்டிதான் -ன்னு சொல்லிருக்காரு. இத விட ஒரு லெஜண்ட் கிட்ட இருந்து வேறென்ன ஒரு பாராட்டு கிடைச்சிட முடியும்?
ரொம்ப க்யூட்
கேள்வி : பிக்பாஸ் வீட்ல உங்க மனசுக்கு பிடிச்சது, ரொம்ப மிஸ் பன்றது யாரு?
பதில் : ரொம்ப க்ளோஸ்-ன்னு அந்த அளவுக்கு இல்ல. ஏன்னா ரொம்ப நாள் பழகல. ஆனா நல்ல பாசிடிவ்-வான மன நிலை, ஒரு கனெக்ஷன் உணர முடிஞ்சது. இருந்தாலும் நமீதா, மதுமிதா இவங்க ரொம்ப ஜெனியூனா இருந்தாங்க. அதுலயும் மதுமிதா ரொம்ப அப்பாவி. குழந்ததனமான மனசு. எதாச்சும் பண்ணனும்ன்னு நெனச்சு ஆக்டிவ் வா பண்ணாலும் அது நேச்சுரலா, க்யூட்டா தான் இருக்கும்.

எந்த இடத்துல உண்மையா நீ இருந்த ?
கேள்வி : பிக்பாஸ் வீட்ல யார அடிக்கனும்ன்னு உங்களுக்கு தோனுது?
பதில் : யாரயும் அடிக்கிற அளவுக்கு வன்மம்-ல்லாம் இல்ல. ஆனா அபிஷேக்-க பார்த்தா நிறைய கேக்கனும். மாஸ் ஹீரோ, மாஸ் ஹீரோன்னு சொல்லியே என்ன பின்னாடி வச்சி செஞ்சிட்டியேன்னு கேக்கனும். உண்மையா இருக்கேன்னு சொல்லி சொல்லி, எந்த இடத்துல உண்மையா இருந்த நீ -ன்னு கேட்கனும்.
இப்படி நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் நடியா.
அவரை பற்றி வந்த மீம்ஸ் பற்றியும், பிரியங்கா பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார். ராஜூ பற்றிய மனதில் தோன்றிய ஒரு விஷயம் பற்றியும் சொல்ல சொல்ல சுவாரஸ்யம் குறையவே இல்லை. நடியா சாங் என்றாலே உடனே அவர் பற்றிய தகவல், பயோ டேட்டா நிறைய தேடினாலும், முக்கியமாக ஏ.ஜே ப்ரொபசர் யார் என்பதை பற்றியும் தீவிர தேடலாக இருந்து வருகிறது. அத்தனையும் உடைக்கும் விதமாக மனம் திறந்த நடியா சாங்-ன் வீடியோக்களை பிலிம் பீட் தமிழ் ட்யூட்யூப் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications











