4 மாசத்துல கரு கலைஞ்சிடுச்சு.. வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம்.. நமீதா பேட்டி!
சென்னை: எங்கள் அண்ணா, பில்லா, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை நமீதா, திருமணம் முடிந்து முதன்முறையாகக் கர்ப்பமானபோது 4-வது மாதத்திலேயே கரு கலைந்துபோன துயரமான சம்பவத்தைப் பற்றிப் பேசி மனம் உடைந்து பேசி உள்ளார்.
நடிகை நமீதா: இதில், நான் நடிகையாக இருந்தபோது கூட இவ்வளவு பிஸியாக இருந்ததில்லை. இப்போது 2 ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாக, கணவர், வீடு, குழந்தைகள் என அனைத்தையும் பார்த்து பார்த்துச் செய்ய வேண்டியிருக்கு. ஆனா, என்னுடைய இரட்டைப் பிள்ளைகளுக்கு இப்போ 4 வயசாகிறது, இதுவரைக்கும் அவங்களை நான் சோஷியல் மீடியாவில காட்டவே இல்லை அதற்கு காரணம் என்னவென்றால், எனக்குக் கல்யாணமாகி முதன்முதலா கர்ப்பமானப்போ, 4-வது மாசத்துலேயே கரு கலைஞ்சிடுச்சு, அந்த வலி என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு. அதுல இருந்து என் மனசுக்குள்ள ஒருவிதமான பயம் வந்துடுச்சு.

கண்ணு பட்டுடும்: அந்தச் சம்பவத்துக்கு பிறகு, குழந்தைகள் என்றாலே அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். என் குழந்தைகளை யாரும் போட்டோ எடுக்கக் கூடாது, யாருக்கும் காட்ட மாட்டேன்னு முடிவெடுத்தேன். நான் எங்க இருந்தாலும் சிசிடிவி கேமரா மூலம் என் பசங்கள பார்த்துட்டே இருப்பேன். அந்த அளவுக்குப் பயம் இருக்கு. ராம நட்சத்திரத்தில் பிறந்த என் பசங்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா, கியான்ராஜ்னு பெயர் வச்சிருக்கேன்.

பயமா இருக்கும்: 3 நாளைக்கு முன்னாடிதான் அவங்களை ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சாங்க, ஸ்கூலுக்குக் கூட நானே போய் டிராப் பண்ணி, நானேதான் கூட்டிட்டு வருவேன். குழந்தைகளுக்குத் திருஷ்டி பட்டா உடம்பு சரியில்லாம போகும்ங்கறதை நான் நம்புறேன். ஏதாவது குடும்ப விசேஷத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்தா உடனே ரெண்டு பேருக்கும் ஜுரம் வந்துடும். இதனாலதான் அவங்களை யாருக்கும் காட்டாம, வெளியேயும் கூட்டிக்கிட்டு போகாம பொத்திப் பொத்தி வளர்க்குறேன் என நமீதா பேசி உள்ளார். நடிகை நமீதா 2007 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலிப்பது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2022 ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.


Click it and Unblock the Notifications