அந்த ஒரு விஷயத்தால என் நெஞ்சே உடைஞ்சு போச்சு.. மனம் திறக்கும் நடிகை நமிதா!
சென்னை: பாஜகவில் இணைந்துள்ள நடிகை நமிதாவின் பிரத்யேக பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலில் வெளியாக உள்ளது. அது தொடர்பான புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
சொந்தம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நமிதா. தமிழில் விஜயகாந்த், பிரபுதேவா நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார்.

தல தளபதி
தளபதி விஜய்யின் அழகிய தமிழ்மகன் மற்றும் தல அஜித் உடன் பில்லா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நமிதா, இப்போ அரசியலிலும் அசத்த களமிறங்கி உள்ளார். அவரது Close Call பேட்டியின் புரமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்தி திணிப்பு
அரசியலில் குதிக்க என்ன காரணம் என்பது குறித்து தனது பேட்டியில் விரிவாக பேசி உள்ளார் நமிதா. பாஜாகவில் இணைவது குறித்து பேசியுள்ள அவர், தமிழ் நாட்டில் இந்தி திணிப்பை தான் ஒரு போதும் ஏற்க மாட்டேன் என்றும் கூறியுள்ள அட்டகாச புரமோ வீடியோ தற்போது வெளியாகி வேற லெவலில் வைரலாகி வருகிறது.

நெஞ்சை உடைத்தது
விவசாயி ஒருவருக்கு நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தை பார்த்த பிறகு தான் மக்கள் சேவையில் தான் பணியாற்ற வேண்டும் என்றும் அந்த நிகழ்வு தன் நெஞ்சையே உடைத்தது என்றும் கூறியுள்ளார் நடிகை நமிதா. நடிகை நமிதாவின் பிரத்யேக பேட்டியின் புரமோ வீடியோவே வெளியாகி வேற லெவலில் ஷேர் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் முதல் சீசனில்
நடிகை நமிதா பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார். தமிழ் இளைஞர்களை மச்சான்ஸ் என அன்போடு அழைக்கும் இவர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீசன் பிக் பாஸ் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும் காண வீடியோவை க்ளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











