நீண்ட காத்திருப்புக்குப் பின் 'காத்திருப்போர் பட்டியல்'.. நந்திதா ஹேப்பி.. ஒன்இந்தியா ஸ்பெஷல்!
'காத்திருப்போர் பட்டியல்' படம் வெளிவந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் 'காத்திருப்போர் பட்டியல்' படம் வெளிவந்துள்ளது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஒன்இந்தியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் நடிகை நந்திதா தெரிவித்துள்ளார்.
லேடி டிரீம் சினிமாஸ் சார்பில் பைஜாடாம் தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'காத்திருப்போர் பட்டியல்'. பாலையா டி.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை அட்டக்கத்தி நந்திதா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படம் பற்றி ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் 'காத்திருப்போர் பட்டியல்' படம் வெளிவந்துள்ளது தமக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நீண்ட காத்திருப்புக்குப் பின்
அவர் மேலும் கூறியதாவது, "ரொம்ப நாள் வெயிட் செய்ததுக்கு அப்புறம் படம் ரிலீஸ் ஆகியிருக்கு. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இந்த படத்துல நான் மேகலா என்ற கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.
காமெடியாக சொல்லியுள்ளோம்
இப்ப உள்ள இளைய தலைமுறை காதலர்கள் எப்படி லவ் பண்ணுவாங்க, அவங்களுக்குள் எப்படி சண்டை நடக்கும் என்பது போன்ற விஷயங்களை லைவ்லியா டைரக்டர் சொல்லி இருக்கார்.
ரயில்வே ஸ்டேஷன்ல தவறு செய்பவர்களை ஆர்.பி.எஃப். எப்படி ட்ரீட் பண்ணுவாங்க என்பதை காமெடியா சொல்லி இருக்கோம்.
உங்களுடைய அடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க...
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீசுக்கு வெயிட்டிங். வனங்காமுடி ஷூட்டிங் போய்ட்டு இருக்கு. வைபவ் கூட ஒரு படம் பண்றேன். அப்புறம்... நர்மதா என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் கமிட் ஆகியிருக்கேன். நன்றி....
இவ்வாறு நடிகை நந்திதா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











