ஒரு வருடமாக நஸ்ரியா பட்ட கஷ்டம்.. பகத் பாசிலை பிரிகிறாரா? பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: நடிகை நஸ்ரியா நஷீம், நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போது, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த சில மாதங்களாக, தனிப்பட்ட பிரச்சனைகளால் போராடி வருகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இது இணையத்தில் பேசு பொருளான நிலையில், இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார். அதில், சினிமாவில் விவாகரத்து என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. நடிகரும் நடிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டால், நடிகரும் சம்பாதிக்கிறார், நடிகையும் சம்பாதிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே ஈகோ உண்டாகி கடைசியில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அப்படித்தான் நடிகை நஸ்ரியாவும் ஒரு முடிவை கையில் எடுத்து இருகிறார்.

பிடித்தமான நடிகை: நடிகை நஸ்ரியா மிகச் சிறந்த நடிகை, இவரின் பெற்றோர் துபாயிலிருந்து, பின் திருவனந்தபுரம் வந்து செட்டில் ஆகி இருக்கிறார்கள். நடிகை நஸ்ரியாவிற்கு சிறுவயதில் இருந்தே, சினிமா மீது ஒரு ஆர்வம் இருந்திருக்கிறது. இதனால் படித்துக் கொண்டு இருக்கும் போதே, அவர் ஒரு டிவி சேனல் ஒன்றில் தொகுப்பாளனியாக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தான், இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாள திரைப்படம் மட்டுமல்லாமல் தமிழிலும் பல வெற்றி திரைப்படங்களில் நஸ்ரியா நடித்திருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

காதல் திருமணம்: நடிகை நஸ்ரியாகவும் பகத் பாசிலும் மலையாள படம் ஒன்றில் நடித்த போது இருவருக்கும் இடையே நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. இதையடுத்து பெற்றோரிடம் காதலை கூறி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நடிகை நஸ்ரியா, கடந்த ஓராண்டிற்கும் மேலாக நான் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருக்கிறேன். என்னுடன் தோழிகளிடம் கூட நான் பேசுவதில்லை, அதுமட்டுமல்லாமல் அண்மையில் நான் நடித்த மலையாள படம் ஒன்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அந்த படத்தின் வெற்றி விழாவில் கூட நான் கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று சொன்னால் நான் தனிப்பட்ட காரணங்களால் மன உளைச்சலையும் மனவேதனையும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன். அந்த உளைச்சலுக்கான காரணத்தை என்னால் தற்போது சொல்ல முடியாது. ஆனால், இதிலிருந்து மீள நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அறிய வகை நோய்: அண்மையில் நடிகர் பகத் பாசில் தனக்கு அரியவகை ADHD எனப்படும் Attention-deficit/Hyperactivity disorder என்ற நரம்பியல் தொடர்பான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நோய் இருப்பவர்களுக்கு மறதி, படபடப்பு, அமைதியின்மை, சரியான நேரத்தில் எந்த வேலையையும் செய்ய முடியாது, எந்த வேலை செய்தாலும் அதில் கவனச்சிதறல் இருக்கும், இதனால், இளம் வயதினருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இதில் இருந்து விடுபட தியானம், மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்.

கணவரை பிரிகிறாரா: ஒராண்டு பட்ட கஷ்டம்: கணவர் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை ஓராண்டுக்கு மேலாக பாதுகாத்து வந்திருக்கிறார் நடிகை நஸ்ரியா. அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து போதும் தனது கணவருக்காக ஒதுக்கி வைத்துவிட்டு, கணவரை கவனித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான். நஸ்ரியா தனது மவுனத்தை கலைத்து இப்படி ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார். அவரின் அந்த பதிவினை பார்க்கும்போது தான், அவர் எந்த விஷயத்தில் இருந்து மீள இருக்கிறார். ஒருவேளை பகத் பாசிலிடமிருந்து விவாகரத்து பெற இருக்கிறாரா? இல்லை சினிமாவிலிருந்து விலக போகிறாரா? என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications











