இப்போ ஆன்லைன் கிளாஸ்ல பிசியா இருக்கேன்.. ’காவலன்’ நீபாவின் கலகல பேட்டி!

சென்னை: நடன அமைப்பாளர் மற்றும் நடிகை என பன்முகத் திறமை கொண்ட நடிகை நீபாவின் கலகலப்பான பேட்டி, ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி இருக்கிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வைகைப் புயல் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருப்பார் நடிகை நீபா.

Actress Neepa’s hilarious interview!

காவலன் மட்டுமின்றி தோட்டா, பெருசு, பள்ளிக்கூடம், கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது அம்மா மாலினி மற்றும் அப்பா வாமனன் ஆகிய இருவரும் பிரபல நடன அமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பதை தாண்டி நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், இந்த லாக்டவுன் நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பரதநாட்டிய வகுப்புகளை எடுத்து வருகிறாராம்.

தொழிலதிபர் சிவக்குமாரை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு, குடும்பத் தலைவியாக வாழ்ந்து வரும் இவர், இதுவரை அவரது கணவர் பெயரை கூறவே மாட்டாராம். யாராவது உங்க கணவர் பெயர் என்ன என்று கேட்டால், கையில் இருக்கும் அவரது பெயர் போட்ட டாட்டூவையே காட்டுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

காவலன் பட சமயத்தில், தளபதி விஜய்யுடன் அந்தாக்‌ஷரி எல்லாம் விளையாடிய அனுபவத்தை இந்த பேட்டியில் கலகலப்புடன் பகிர்ந்துள்ளார். அவரது முழு பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X