ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தமிழ் கற்கும் நீத்து!

நல்ல ஆங்கிலமும், சரளமாக இந்தியும் பேசும் நீத்து சந்திரா, இப்போது வேகமாக தமிழும் கற்று வருகிறார். தமிழ் கற்பதில் வேகம் காட்டும் நீத்துவிடம் ஏன் இந்த ஆர்வம் என்று கேட்டால் தமிழ் சினிமாவில் தனக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதால் தமிழ் கற்பதாக தெரிவிக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வருவதாகவும் அவர் சொல்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2 வாரங்களுக்கு முன்பு ஒரு தமிழ்ப் பட இயக்குநர் என்னை அணுகினார். அவருக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை. இந்தியும் தெரியவில்லை. படமும் தமிழில்தான். எனவே நான் ஒரு முடிவு செய்தேன், நாமே தமிழ் கற்றுக் கொண்டு விட்டால் என்ன என்பதுதான் அது.
தமிழ்ப் பட வாய்ப்புகளும் அதிகம் வர ஆரம்பித்துள்ளன. எனவே தமிழ் கற்றுக் கொண்டால் வசதியாக இருக்குமே என்று இப்போது தமிழைக் கற்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு டியூஷன் டீச்சரை ஏற்பாடு செய்துள்ளேன். அவர் என்னுடன் தமிழில் மட்டுமே பேசுவார். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தமிழ் கற்றுத் தருகிறார்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதி வைத்துக் கொண்டு பிறகு தமிழில் பேசி அவரிடம் ஒப்பிப்பேன் என்கிறார் நீத்து.
மலையாள சுந்தரிகளுக்கு நீத்து சரியான போட்டியாக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











