சில்க் ஸ்மிதா காத்துலயே மிதப்பா.. உயிரே சீரியல் மூலம் அசத்தல் என்ட்ரி.. நடிகை நிரோஷா ஜாலி பேட்டி!

சென்னை: அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிரோஷாவின் பேட்டி 4 பாகங்களாக வெளியாகி உள்ளன.

Recommended Video

SILK SMITHA காத்துல மிதப்பாள் | CLOSE CALL WITH ACTRESS NIROSHA PART-04 | FILMIBEAT TAMIL

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் உயிரே எனும் சீரியல் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரிசனம் தந்துள்ளார் நடிகை நிரோஷா.

80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியான இவர், சில்க் ஸ்மிதா கூட இணைந்து நடித்த அனுபவங்களையும், பிக் பாஸ் குறித்தும் பேசியுள்ள வீடியோ பேட்டிகள் வைரலாகி வருகின்றன.

மணிரத்னம் படத்தில் அறிமுகம்

மணிரத்னம் படத்தில் அறிமுகம்

எம்.ஆர். ராதாவின் மகளான நடிகை நிரோஷாவின் முதல் படமே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படம் தான். அந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஒரு பூங்காவனம் பாடலில் அப்பவே பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆடி பாடி விளையாடி ரசிகர்களை கவர்ந்தனர். அவரது பேட்டி தற்போது நமது தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

சூரசம்ஹாரம்

பிக் பாஸ் பற்றி நிரோஷாவிடம் கேட்ட உடனே, அதை பற்றி என்னத்த சொல்ல என்பது போல யோசித்த அவர், சிலர் அதனை லைஃப் சேஞ்ச் பண்ணும் இடமாக நினைத்து வருகின்றனர். ஆனால், சில வாய்ப்புகள் மட்டுமே வருகிறது. பெரிதாக ஒன்றும் ஷைன் ஆவதாக தெரிவதில்லை என்றார்.

காத்துலயே பறப்பா

கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவுடன் இரண்டு படங்களில் நடித்துள்ள அனுபவங்கள் குறித்து பகிர்ந்த நடிகை நிரோஷா, அர்ஜுன் நடிப்பில் வெளியான சொந்தக்காரன் எனும் தமிழ் படத்திலும், மலையாளப் படம் ஒன்றிலும் இருவரும் சேர்ந்து நடித்துள்ளோம். தனியாக நான் நடிக்கும் போது சில்க் உடன் ஒப்பிடுவார்கள், இணைந்து நடித்தால், அவர் ஸ்கோர் பண்ணி விடுவார். அவரது பயோபிக் குறித்து பேசும் போது, அவரை போல யாரும் நடிக்க முடியாது, அவ அப்படியே காத்துல பறப்பா என்றார்.

உயிரே சீரியல்

ஹீரோயினாக கலக்கிய நிரோஷா, நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்டார். பின்னர், உடல் எடையை எல்லாம் அதிகரித்த பின்னர், துணை நடிகையாக பிரியமான தோழி, படிக்காதாவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சின்னப்பாப்பா பெரியப்பாப்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த நிரோஷா கலர்ஸ் தமிழில் வெளியாகி உள்ள உயிரே சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவரது பேட்டியை கண்டு ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X