Oviya: வதந்திக்கு பயப்பட மாட்டேன்.. எனக்கு குழந்தை இருப்பது உண்மை.. ஓபனாக பேசிய ஓவியா!
சென்னை: களவாணி, மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இல்லத்தரசிகளின் மனதையும் வென்றார். தற்போது ஓவியா அளித்திருக்கும் பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ போன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலர் ஓவியாவிற்கு ஆதவராக இருந்தனர். ஆனால், சிலர் அந்த வீடியோவை ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டு, அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து அது ஓவியா தான் என்றனர். அதே போல, வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தில்லாக பதில் அளித்தார்.

மேலும், இதுகுறித்து , சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓவியா புகார் அளித்திருந்தார். ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஓவியாவின் மேலாளர் புகார் கொடுத்தார். மேலும், அந்த வீடியோவை நீக்கும்படி திருச்சூர் சைபர் கிரைம் போலீசாரிடம் ஆன்லைனில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.
குடிப்பேன்: நடிகர் ஓவியா youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்த வீடியோவில் ரூமரை பார்த்து நான் எப்போதுமே பயப்பட்டது கிடையாது. அப்படி பயப்படும் ஆள் நான் இல்லை. மேலும், என்னைப்பார்த்து பலர், குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக, கூறி வருகிறார்கள். அப்படி என்றால் நான் சிறுவயதில் இருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தான் இருந்தேன். இப்போது, குடி என்பது எனக்கு போர் அடித்துவிட்டது. நான் எந்த விஷயமாக இருந்தாலும், எக்ஸ்ட்ரீமாக போய் ஒரு கை பார்த்துவிட்டு அதில் இருந்து வெளியில் வந்துவிடுவேன் அது தான் என் பழக்கம். இப்போது, குடியும் இல்லை எதுவும், இல்லை நிம்மதியாக இருந்தால் போதும்.
குழந்தை இருப்பது உண்மை தான்: சிலர் எனக்கு குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தை துபாயில் வளர்ந்து வருவதாகவும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மையில் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அது நான் வளர்க்கும் என் நாய். உண்மையிலேயே அதுதான் என்னுடைய குழந்தை, படுப்பது, சாப்பிடுவது, விளையாடுவது என அனைத்துமே அவன் கூட தான். மனிதர்களுடன் இருப்பதைவிட நாயுடன் இருப்பது எனக்கு காம்பர்டபிளாக இருக்கிறது.
திருமணம் தேவையில்லாத ஒன்று: எனக்கு குழந்தை வேணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இதுவரைக்கும் வந்ததே இல்லை. சிலர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியே இல்லாமல் பெயருக்காக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்கிறார்கள், விவகாரத்து பெற்றவர்களும் இருக்கிறார்கள். நான் திருமணம் செய்து கொண்டு, அது போன்ற ஒரு வாழ்க்கை வாழ்வதில் விருப்பமில்லை. திருமணம் செய்து கொண்டு ஒருவருடன் வாழ்வது என்பது எனக்கு ஒத்து வராத ஒன்று.
நான் வாழ்வது எனக்காக தான், மற்றவர்களுக்காக இல்லை, நல்ல பேருடன் வாழ்வதற்காகவும் இல்லை. திருமணம் என்பது எனக்கு தேவைப்படாத ஒன்றாகவே இருக்கிறது. திருமணத்திற்கு நான் தயாராகவும் இல்லை. திருமணத்திற்கு இனி மேலும் நான் தயாராக மாட்டேன் என, அந்த பேட்டியில் ஓவியா மனம் திறந்து பல விஷயத்தை பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











