பீஸ்ட் நாயகிக்கு இப்படி ஒரு ஆசையா?… நிறைவேறுமானு தான் தெரியல… மனம் திறந்த பேட்டி !

சென்னை : தெலுங்கில் மிகவும் வரவேற்பை பெற்ற நடிகை பூஜா ஹெக்டே தனது மனதில் இருக்கும் ஆசையை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு என அனைத்து நடிகர்களும் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கி உள்ள இத்திரைப்படம் நேற்று வெளியாகி பல நெகட்டிவ் கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் ஏமாற்றத்தை அளித்துள்ளதால் தளபதியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், என்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததே தமிழில் இருந்துதான். முகமூடி படத்திற்கு பிறகு எனக்கு எந்த திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வரவில்லை. ரோலர் கோஸ்ட் போல எனது திரைவாழ்க்கையில் பள்ளம் மேடுகள் இருந்தன. பல போராட்டங்களுக்கு பிறகு ஸ்டார் நடிகை என்ற பெயர் கிடைத்துள்ளது என்றார்

சூப்பர் கெமிஸ்டிரி

சூப்பர் கெமிஸ்டிரி

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி ஆனதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. விஜய் சார் ரொம்ப அமைதி அவரோட படத்தில் நடித்ததே நல்ல அனுபவமாக இருந்தது. பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் எனக்கு கெமிஸ்டிரி நன்றாக இருந்தது என்றார்.

அரபிக்குத்து

அரபிக்குத்து

புட்டபொம்மா பாடல் எனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொடுத்தது. ஆனால், இதைவிட இரண்டு மடங்கு உலகம் ழுழுவதும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது அரபிக்குத்து பாடல். உலகநாடுகள் பலவற்றிலிருந்து சோஷியல் மீடியாவில், அரபிக்குத்துக்கு டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது அந்த பாடல் எவ்வளவு பிரபலமாகி உள்ளது என்பதை பார்க்க முடிகிறது என்றார்.

நல்ல கேரக்டரில்

நல்ல கேரக்டரில்

தொடர்ந்து பேசிய பூஜா ஹெக்டே, தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த போது கூடதொடர்ந்து தமிழ் படங்களை பார்த்தேன். விஜய் சேதுபதியின் 96 திரைப்படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும்,அதுவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்றார். என் அப்பா கமல்ஹாசனின் தீவிர ரசிகர், அவருக்கு நாயகன் படம் பிடிக்கும், அந்த படத்தை டிவியில் எப்போ போட்டாலும் அப்பா அவ்வளவு ஆர்வமாக பார்ப்பார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X