கோலிவுட்ல அந்த மாஸ் ஹீரோ கூட நடிக்க ஆசை.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பூஜிதா ஸ்பெஷல் பேட்டி!
சென்னை: இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நடிகை பூஜிதா பொன்னடாவின் ஸ்பெஷல் பேட்டி வெளியாகி இருக்கிறது.
தெலுங்கில் நேரடியாக ஆன்லைன் தளத்தில் ரிலீசாகி உள்ள 'ரன்' படத்தின் நாயகியும் இவர் தான்.
30 வயதாகும் பூஜிதாவின் சேலை கட்டி இடுப்பை காட்டிய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்க லைக்குகளை அள்ளி வைரலானது குறிப்பிடத்தக்கது.

குறும்படங்களில் நடித்து வந்த பூஜிதா, 2016ம் ஆண்டு வெளியான துந்தரி என்ற தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
ராம்சரண், சமந்தா நடிப்பில் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்தில் பத்மா எனும் கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ் இந்தியா படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் பூஜிதா.
லக்ஷ்மிகாந்த் இயக்கத்தில் நவ்தீப் நடிப்பில் நேற்று வெளியான 'ரன்' படத்தில் நாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் பிறந்து இருந்தாலும், சென்னையில் வளர்ந்த பூஜிதா அருமையாக தமிழ் பேசுகிறார். விரைவிலேயே கோலிவுட்டில் கால் பதிக்க திட்டமிட்டு வரும் இவர், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாம். சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவையும் நம்முடன் பகிர்ந்துள்ளார். மேலும், பூஜிதா குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை கிளிக் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications











