மார்பகம், அந்தரங்க உறுப்பில் காயம்.. பிரத்யுஷா மரணம் தற்கொலை இல்லை.. 24 ஆண்டு போராடிய தாய்!

சென்னை: நடிகை பிரத்யுஷா மறைந்து கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றம் அவரின் காதலர் சித்தார்த் ரெட்டிக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு 24 ஆண்டுகளாக பிரத்யுஷாவின் அம்மா தன்னந்தனியாக போராடி இன்று நீதியை வென்றுள்ளார். Aval Vikatan யூடியூப் சேனலுக்கு அவரின் அம்மா சரோஜினி தேவி பேட்டி அளித்துள்ளார்.

அதில், என் மகள் படித்துக்கொண்டு இருக்கும் போதே சித்தார்த் ரெட்டி என்பவரை காதலிப்பதாக சொன்னால், நான் இது திருமணம் செய்து கொள்ளும் வயது இல்லை. அவன் இப்போது தான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறான். இதனால், இப்போது நடிப்பில் கவனத்தை செலுத்தி பணம் சம்பாதி. அதன் பிறகும் இதேபோல இருவரும் காதலித்தால் திருமணம் செய்து வைக்கிறேன் என மகளிடம் சொல்லிவிட்டேன். ஆனால், சித்தார்த் ரெட்டியின் பெற்றொருக்கு என் மகளை திருமணம் செய்து வைப்பதில் விருப்பம் இல்லை. அதற்கு காரணம் அவள் நடிகை என்பதால் அவர்களுக்கு பிடிக்க வில்லை. இப்படியே ஒரு வருடம் சென்றுவிட்டது. பிரத்யுஷா தமிழில் அடுத்தடுத்த படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது தான் ஒரு நாள் பிரத்யுஷா மாலை 3 மணிக்கு பியூட்டி பார்லருக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றார். பார்லரில் இருந்து மாலை 6 மணிக்கு எனக்கு ஃபோன் செய்தார். அம்மா ஜெயம் பட கம்பேனியில் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. நான் பார்லரில் இருந்து நேராக அங்கே செல்கிறேன் என மகிழ்ச்சியாக சொன்னர். அது தான், நான் அவளிடம் கடைசியாக பேசியது.

Prathyusha case interview

மரணத்தில் சந்தேகம்: அந்த பார்லருக்கு சித்தார்த் ரெட்டி வந்து, பேச வேண்டும் என அழைத்துள்ளார். சித்தார்த் அழைத்ததும் பிரத்யுஷா அவனுடன் காரில் சென்று இருக்கிறார். இரவு 8 மணிக்கு நான் பிரத்யுஷாவிற்கு போன் செய்தேன் போன் எடுக்கவே இல்லை. பிறகு பிரத்யுஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சொன்னார்கள் நானும் என் மகனும் சென்றோம். அங்கு ஐசியூவில் பிரத்யுஷாவும் வேறு ஒரு அறையில் சித்தார்த்தும் இருந்தார். என் மகளை பார்க்ககூடவிடவில்லை. தூரத்தில் இருந்துதான் பார்த்தேன். மறுநாள் காலை மாற்று துணி எடுத்துக்கொண்டு வர சொன்னார்கள், நானும் என் மகனும் வீட்டிற்கு வந்து துணி எடுத்து சென்று கொடுத்தோம். பின் சிறிது நேரத்திற்குள் பிரத்யுஷா இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

Prathyusha case interview

கற்பழித்து கொலை : அதன் பின் போலீசார் இருவரும் காதலித்து வந்தார்கள் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் கூல்ட்ரிங்கில் விஷம் கலந்து குடித்துவிட்டார்கள். இதில், பிரத்யுஷா அதிகமாக விஷம் குடித்தால் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக மருத்துவமனையும், போலீசாரும் அறிக்கை கொடுத்தார்கள். அதன் பின் தான் என் மகளின் உடலை பார்த்தேன் அதில்,அவரது கழுத்தில் விரல் பதிவு இருந்தது. கட்டாயப்படுத்தி அவளை விஷம் கொடுத்து இருப்பதாக எனக்கு சந்தோகம் வந்ததால், மீண்டும் பிரேதப்பரிசோனை செய்ய சொன்னோன் அப்போது தான் பிரத்யுஷாவை சித்தார்ரெட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து இருக்கிறார்கள். அவளது மார்பு பகுதியில் காயமும், அந்தரங்க உறுப்பிலும், தொடையிலும் சிலரின் விந்தணுக்களும் இருப்பதாக உண்மையான ரிப்போர்ட் கொடுத்தார். இந்த ரிப்போர்ட் வருவதற்குள் என் மகளுக்கு இறுதி சடங்கு முடிந்து எங்க குடும்ப வழக்கப்படி எரிந்துவிட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன்பின் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இதனால், பலரிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு: அதை பற்றி எல்லாம் பயப்படாமல் துணிந்து என் மகளின் மரணத்திற்காக நீதி கேட்டு போராடினேன். அதையடுத்து, கீழ் நீதிமன்றம் சித்தார்த் ரெட்டிக்கு மட்டும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் போதிய ஆதாரம் இல்லாததால் தப்பித்துக்கொண்டார்கள். தண்டனை விதித்த 15 நாளிலேயே ஜாமீனில் சித்தார்த் ரெட்டி வெளியே வந்துவிட்டார். சித்தார்த் ரெட்டிக்கு ஆயுள் தண்டைனை வழங்க கோரி, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். ஆனால், உயர்நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு, சித்தாரித்தின் தண்டனையை இரண்டு ஆண்டாக குறைத்து, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

கண்ணீர் பேட்டி: இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். அதில், தனது மகளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது சித்தார்த் ரெட்டி தான் என்றும், இது திட்டமிட்ட கொலை என்ற கருத்தைமுன்வைத்தேன். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் இருந்தது. இதையடுத்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சித்தார்த் ரெட்டி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் அவர் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரின் இரண்டு ஆண்டுகள் தண்டனை ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை பிரத்யுஷா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள தூண்டுதலாக இருந்தது சித்தார்த் ரெட்டி தான் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X