துருவ் விக்ரமின் பெண் ரசிகைகளை... மனம் திறக்கும் பிரியா ஆனந்த்

Recommended Video

நானும் அஜித் சாரும் ஒரேமாதிரி | ACTRESS PRIYA ANAND | V-CONNECT | FILMIBEAT TAMIL

சென்னை: துருவ்வுக்கு பெண் ரசிகைகள் அதிகம். மற்ற நடிகர்களுக்கு இருக்கும் பெண் ரசிகைகளை விட இவருக்கு இருக்கும் பெண் ரசிகைகள் வித்தியாசமானவங்க என்று நடிகை பிரியா ஆனந்த் கூறியுள்ளார். துருவ் வெற்றிக்காக விக்ரம் அதிகம் மெனக்கெடுவார் என்றார் பிரியா ஆனந்த். ஆதித்யா வர்மா திரைப்படத்தில் துருவ்விற்கு ஜோடியாக நடித்து வரும் பிரியா ஆனந்த் தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நான் நடிக்கும் ஆதித்யா வர்மா படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகுது. இது ஏற்கனவே தெலுங்கிலும், இந்தியிலும சூப்பர் ஹிட்டான படம். அதனால இங்கேயும் ஹிட் ஆகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

Actress Priya Anand Exclusive interview

இந்தப்படத்தை E4 எண்டெர்டெயின்மெண்ட் முகேஷ் தான் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் எல்லா படத்திலேயும் நான் கண்டிப்பா இருப்பேன். நான் மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் சார் கூட எஸ்ரா அப்பிடின்னு ஒரு ஹாரர் படம் பண்ணியிருக்கேன். அந்த படத்தையும் E4 எண்டெர்டெயின்மெண்ட் முகேஷ் தான் தயாரிச்சார்

நான் அப்போ மலையாளத்திலேயும், கன்னடத்திலும் பெரிய சூப்பர்ஸ்டார்ஸ் கூட நடிச்சிட்டு இருந்தேன். தமிழ்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஒவ்வொரு படியா மேலே ஏறி வந்துட்டு இருந்தேன். ஆனா, அங்கே, ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்கள் கூட நடிச்சிட்டேன். அவங்க பண்ற ஒவ்வொரு படமும் ரொம்ப வித்தியாசமா இருக்கும்.

அவங்க ஒரு படம் பண்ணினாங்கன்னா ரொம்ப சிரத்தை எடுத்து பண்ணுவாங்க. ரீ சூட் பண்ணுவாங்க. அதனால அங்க நடிக்கும்போது, நானும் அதுல இருக்கேன்னு நினைக்கும்போது சந்தோசமா இருக்கும். அதே மாதிரி ஒரு படத்தோட புரமோஷனும் நல்லா பண்ணுவாங்க.

பெரிய நடிகர்களான சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு இவங்களோட படம் நடிக்கும்போது அந்த படங்கள் சக்சஸ் ஆகுறது எனக்கும் பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. ஆனா அந்த பெருமையை நான் எடுத்துக்க முடியாது. அவங்க கூட நான் ஜர்ணி பண்ணியிருக்கேன்னு சொல்றதே எனக்கு சந்தோஷம் தான்.

சிவகார்த்திகேயன் மாதிரியான ஸ்டார்களுக்கு ஃபேமிலி ரசிகர்கள் நிறைய இருக்காங்க. அவரோட படம் அவங்க கிட்ட இவ்வளவு தூரம் ரீச் ஆயிருக்கு. குறிப்பா அவரோட போன படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகியிருக்குன்னு கேட்கும்போது சந்தோஷமா இருக்கு. அவர்கூட நான் நடிச்சிருக்கேன்னு சொல்றதே எனக்கு சந்தோஷம் தான்.

அதே மாதிரி துருவ்வும், அவரை நான் கடந்த 10 15 வருஷமா பாத்துக்கிட்டு இருக்கேன். அவருக்கு ஏற்கனவே பெண் ரசிகைகள் ஜாஸ்தி இருக்காங்க. நான் விக்ரம் பிரபு, அதர்வா, கவுதம் கார்த்திக் இவங்க மூணு பேர் கூடவும் ஒர்க் பண்ணியிருக்கேன். மூணு பேர் கூடவும் ஒரே சமயத்தில் நடிச்சிருக்கேன். இப்போ நாலாவதா துருவ்வோட நடிக்கப்போறேன்.

துருவ்வுக்கு இருக்குற பெண் ரசிகைகள் மத்தவங்களுக்கு இருக்குறதை விட ரொம்ப வித்தியாசமானவங்க தான். அதே மாதிரி தான் துருவ்வுக்கும் அவரோட அப்பா விக்ரமுக்கும் நடுவுல இருக்குற ரிலேஷன்சிப். ரொம்ப உண்மையா இருந்தது. இந்த அளவுக்கு யாரும் இருக்கமாட்டாங்கன்னு தான் நான் நினைக்கிறேன். துருவ்வோட வெற்றிக்காக நிறையா கஷ்டப்படுறார்னு தான் எனக்கு தோணுது என்றார் பிரியா ஆனந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X