யாருமே கேம் ஆட மாட்றாங்க.. பிக் பாஸ்ல இவங்க தான் என் ஃபேவரைட்.. பிரியா பிரின்ஸ் பளிச் பேட்டி!
சென்னை: பிரபல சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டது குறித்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் பேசியுள்ள பேட்டி தனித் தனி பாகங்களாக வெளியாகி உள்ளன.
பாலா மற்றும் ஆரி சொல்வது போல, இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரும் நல்லா இறங்கி கேம் ஆட மாட்றாங்க என பிரபல சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ள பிரியா பிரின்ஸ் சீக்கிரமே வெப்சீரிஸிலும் அடியெடுத்து வைக்க உள்ளார்.

சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகையான பிரியா பிரின்ஸ் போட்டோஷூட் ஒன்றில் பிசியாக இருந்தபோது, அவரிடம் அந்த ஸ்பாட்டிலேயே எடுக்கப்பட்ட பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் கலக்கிய பிரியா பிரின்ஸ், அடுத்ததாக வெப்சீரிஸிலும் அடியெடுத்து வைக்க உள்ளார்.
48 மணி நேர பாதுகாப்பு
கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிந்த உடனே வெல்னஸ் டிரைனரான பிரியா பிரின்ஸ் மருத்துவமனையில் அட்மிட் ஆகாமல், 48 மணி நேர பாதுகாப்பை எடுத்துக் கொண்டு கொரோனாவில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளததையும், அதற்காக, தான் மேற்கொண்ட பாதுகாப்பு முறைகளையும் இந்த வீடியோவில் தெளிவாக விளக்கி உள்ளார்.
கேம் ஆடவில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தீவிரமாக பார்த்து வரும் இவர், இந்த சீசனில் பாலா மற்றும் ஆரி சொல்வது போல, யாருமே கேமை சீரியஸா எடுத்துக்கிட்டு விளையாடாமல் அன்பு, பாசம், குரூபிசம் என சேஃப் கேம் ஆடுறாங்க என்றார்.
ரம்யா தான்
உங்களுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் யார் என்கிற கேள்விக்கு, ரம்யா பாண்டியன் தான் என்றார். போட்டோஷூட்டுக்காக பிரின்ஸ் போலவே மேக்கப் போட்டுக் கொண்டு இருந்த பிரியா பிரின்ஸ், ரம்யா பாண்டியனுக்கு முதலிடத்தையும், ஆரிக்கு இரண்டாவது இடத்தையும் பாலாவுக்கு டாப் 3 இடத்தையும் கொடுத்தார்.

அர்ச்சனா கேங்
அர்ச்சனாவின் அன்பு கேங் பற்றியும், அவர்களும் நல்லா இறங்கி விளையாடுனா இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகும் என்றும் பளிச்சென பேசியுள்ளார். மேலும், 32 வயதாகும் பிரியா பிரின்ஸுக்கு ரியா எனும் இளம் வயது மகள் இருப்பது குறித்தும் அவருக்கு கொரொனா காலத்தில் கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ் உள்ளிட்டவை பற்றியும் அறிந்து கொள்ள பேட்டியை மிஸ் பண்ணாதீங்க!


Click it and Unblock the Notifications











