உங்க ட்ரெஸ் சைஸ் என்ன? கமல் படத்தில் நடிக்க என்னிடம் முதல்ல இப்படிதான் கேட்டாங்க.. பிரியதர்ஷினி!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் நடிக்க என்னோட சைஸ் கேட்டாங்க அதை கேட்டதும் முதலில் நான் ஷாக் ஆகிவிட்டேன் என பிரியதர்ஷினி ராஜ்குமார் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
அச்சம் என்பது மடமையடா, கவண், ரெமோ, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் பிராத்தல் நடத்தும் இடத்தின் மேனேஜராக இவர் நடித்திருப்பார்.

அந்த கதாபாத்திரத்துக்கு தன்னை தேர்வு செய்ய அணுகும் போது முதலில் படக்குழுவினர் யாரும் போன் செய்யவில்லை என்றும் டைரக்ட்டாக காஸ்ட்யூம் டீமில் இருந்து கால் வந்தது எனக் கூறியுள்ளார்.
கமல் படத்தில் அப்படியொரு ரோல்: கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி நான் போகவில்லை. ஆனால், என்னை தேடி அந்த வாய்ப்பு கிடைத்தது. அதை ரொம்பவே பாக்கியமாக கருதுகிறேன். பழைய விக்ரம் படத்தில் நடித்ததை போல கமல்ஹாசன் சாருடன் மென் இன் பிளாக் படத்தில் வருவது போல கோட் சூட் எல்லாம் போட்டுக் கொண்டு கன் வைத்து நிற்பேன் என கனவுக் கண்டேன். ஆனால், கிடைத்ததோ விபச்சார விடுதி மேனேஜர் ரோல் தான். அது கிடைத்ததை பெரிய விஷயமாகவே கருதுகிறேன் என்றார்.

மாயாவே அப்படி நடிச்சார்: அந்த ரோல் பற்றி குறிப்பிடும் போதே, ஹாலிவுட் ஸ்டைலில் இந்த படம் உருவாகிறது என்றும் உங்க ரோல் ஆபாசமாக எல்லாம் இருக்காது, ரொம்பவே டீசன்ட்டாக இருக்கும் என்றார்கள். அந்த சீனில் முக்கிய கதாபாத்திரத்தில் மாயா நடிப்பதை அறிந்து அவரே அந்த ரோல் பண்ணும் போது நாம ஏன் பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன். உடனே ஓகே சொல்லிவிட்டேன் என பிரியதர்ஷினி ராஜ்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

சைஸ் என்னன்னு கேட்டாங்க?: லோகேஷ் டீமில் இருந்து எனக்கு முதலில் கால் வரவில்லை. அதற்கு முன்னதாக காஸ்ட்யூம் டீமில் இருந்து பேசுகிறோம் உங்க டிரெஸ் சைஸ் என்ன சொல்லுங்க எனக் கேட்டனர். நான் உடனே ஷாக் ஆகிட்டேன், படக்குழுவில் இருந்து யாருமே என்னிடம் பேசவில்லையே என்றேன். ராஜ்கமல் டீமில் இருந்து பேசுவார்கள், எங்களுக்கு உங்க டீட்டெய்ல்ஸ் வந்துடுச்சு, அதான் கேட்டோம் என்றார்கள். அதன் பின்னர் என் டிரெஸ் அளவு எல்லாம் கொடுத்தேன் என்றார். ஆனால், அந்த படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை அதுதான் வருத்தம் என்றார்.

பகத் ஃபாசிலுடன் நடிக்க முடியாது: ஆனால், அந்த சீனில் பகத் ஃபாசிலுடன் நடித்த அனுபவம் சிறந்த அனுபவம். அவருடன் எல்லாம் நடிக்கவே முடியாது. 3 நாட்கள் நடிக்க வேண்டும் என கால்ஷீட் போட்டிருந்தார்கள். ஆனால், பகத் ஃபாசில் அரை நாளில் அந்த சீனை முடித்து என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டார். அந்தளவுக்கு கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நொடியே நடித்து அசத்தி விடுவார் என்றார்.
விஜய் சேதுபதியை திட்ட முடியுமா?: கவண் படத்தில் டிவி சேனல் நடத்தும் நபராக நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். விஜய் சேதுபதியை திட்டும் காட்சிகள் எல்லாம் தாறுமாறாக இருக்கும். அது பற்றி எழுப்பிய கேள்விக்கு, விஜய் சேதுபதியை இப்போ திட்ட முடியுமா? அப்போ அவர் அப்கமிங் ஆர்ட்டிஸ்ட். ஆனால், இப்போ அவரது வளர்ச்சி எங்கேயோ போய் விட்டது எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications