மார்பகம் எடுப்பாக தெரிய பேட் வைக்கச் சொல்லுறாங்க.. தென்னிந்திய சினிமாவில் ராதிகா ஆப்தேவுக்கு நடந்த கொடுமை
சென்னை: இந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகை நடிகை ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அதே நேரத்தில் பான் இந்தியா ஸ்டாராகவும் திகழ்ந்து வருகிறார். பாலிவுட் சினிமா தொடங்கி தென்னிந்திய சினிமா வரை இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும்போது, நடிகை ராதிகா ஆப்தே தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் போது சில படங்களில் நடிக்கும்போது எதிர் கொண்ட சில தர்ம சங்கடமான சூழல்களை எதிர் கொண்டது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதாவது அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு சொன்னது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் அந்த பேட்டியில் சொல்லும் போது, " தென்னிந்தியாவுல பல நல்ல சினிமா வருகிறது. அதே நேரத்தில் நான் பணியாற்றிய படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நான் இப்படியான அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளேன். படத்துல எடுப்பா தெரியுறதுக்காக என் மார்பகம் மற்றும் பின் பக்கத்தில் அதிக பேட்களை வைக்க நிர்பந்திக்கப்பட்டேன்.
நான் மேக்-அப் செய்து கொண்டு இருக்கும் போது உதவி இயக்குநர்கள் என்னிடம் வந்து, 'மேடம் அதிக Padding'-ன்னு சொல்வாங்க. எனக்கு ஒரு மாதிரி அசௌகரியமாக இருக்கும். கோபமும் வரும். நீங்க உங்க வீட்ல உள்ள அம்மா, தங்கச்சிங்க கிட்ட இப்படித்தான் அதிக Pading வைக்க சொல்வீங்களான்னு கேட்க தோணும்" என்று பகிர்ந்துள்ளார்.

ஷாக்: நடிகை ராதிகா ஆப்தே இவ்வாறு பகிர்ந்துள்ளது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. தமிழிலும் அவர் சில படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்கில் நடித்த சில படங்களில் தான் நடிகை சில பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்திருந்தார். அப்படி நடிக்கும் போது தான் நடிகை இவ்வாறு, மார்பகங்களை எடுப்பாக காட்ட அதிக பேட்களை பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் பாலிவுட்டில் நடிகை ராதிகா ஆப்தே சில படங்களில் மிகவும் கிளாமராக அதுவும் சில காட்சிகளில் ஆடைகள் இல்லாமல் கூட நடித்துள்ளார்.
ரசிகர்கள் வாக்குவாதம்: இந்த காட்சிகளில் நடிப்பதை விட, தென்னிந்திய சினிமாவில் நீங்கள் நடித்த படங்கள் ஒன்றும் மோசமில்லையே என்று சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான சில கருத்துக்களுக்கு சில இணையவாசிகள், படத்தின் தேவை, கதாபாத்திரத்தின் தேவை இருக்கும்போது நடிப்பதற்கும், பாடல்களில் கிளாமராக நடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ராதிகா ஆப்தே சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











