ரகசியமாக ராதிகாவுக்கு நடந்த மிகப்பெரிய ஆப்ரேஷன்.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் கடந்தாண்டு 'மெய்யழகன்' வெளியாகி பலரின் பாராட்டுக்களை குவித்தது. மெய்யழகன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் இந்தாண்டு எந்த படங்களும் வெளியாகவில்லை. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' படத்தில் க்ரித்தி ஷெட்டி,ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதிக்கட்ட பணிகள் தாமதமான காரணத்தால் படம் டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் வாங்கிய 10 கோடியே 35 லட்சத்தை கடனை வட்டியுடன் திருப்பியளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால், வா வாத்தியார் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற குழப்பம் எழுந்துள்ளது.
அந்தணன் பேட்டி: இதுகுறித்து Retro Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள வலைப்பேச்சு அந்தணன், கார்த்தி, ஞானவேல் ராஜாவிற்கு நெருங்கிய உறவினர் என்பதால், அவரை கடனில் இருந்த காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கார்த்தி இந்த படத்தில் நடித்தார். இயக்குநர் படத்தை சொன்ன தேதிக்குள் முடித்து கொடுக்காததும், ஞானவேலுக்கு ஏற்கனவே இருக்கும் கடன் பிரச்சனை என எல்லாமாக சேர்ந்து லாக்காகிவிட்டது. ஆனால், கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. நிச்சயமாக சர்தார் 2 ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

சூர்யாவின் கருப்பு : அதே போல, சூர்யாவின் கருப்பு படம் வெளியாகாததற்கு காரணம் ஓடிடி பிஸ்னஸ் தான். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தோல்வி அடைந்ததால், ஓடிடி நிறுவனங்கள் படத்தை வாங்க தயங்குகின்றன. படத்தை வெளியீடுங்கள் பிறகு பார்க்கலாம் என்கிறார்கள், இந்த காரணத்தினால் தான் கருப்பு படம் தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது. தற்போது ஒரு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை முடித்துவிட்டதாகவும், படத்தை ஜனவரியில் வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரியில் தான் ஜனநாயகன், பராசக்தி போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஜனவரியை விட்டால், அடுத்து ஏப்ரலில் தான் கருப்பு படத்தை வெளியிட முடியும். இதனால், எந்த தேதியில் கருப்பு படம் வெளியாகும் என்பது தெரியவில்லை. ஆனால், கருப்பு திரைப்படம் சூர்யாவின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு திரைப்படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ராதிகாவிற்கு ஆப்ரேஷன்: அதே போல சூர்யாவின் அடுத்த திரைப்படம் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இந்த படத்தை குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்க வேண்டும் என நினைத்து பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்தன. அந்த படத்தில் ராதிகாவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு படத்தில் நிறையகாட்சி உள்ளன. இந்த நேரத்தில் தான் ராதிகா கீழே விழுந்து காலில் அடிபட்டு ஆப்ரேஷன் நடந்துள்ளது. இதனால், ராதிகா ஓய்வு எடுத்துவிட்டு வந்த நேரத்தில் தான் ராதிகாவின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போய், ராதிகாவின் அம்மா இறந்துவிட்டார்கள். இதனால் அந்த படப்பிடிப்பு தள்ளிப்போய் தற்போது படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று வலைப்பேச்சு அந்தணன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











