“இனி இந்த தப்பை செய்யவே கூடாது”.. காலம் கடந்து பிரபல நடிகை எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!

பிஸியாக படங்களில் நடித்து வருவதால் கடந்த 3 ஆண்டுகளாக தான் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

பனாஜி: கடந்த 3 ஆண்டுகளாக ஓய்வே எடுக்காமல் நடித்து வருவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் கீதாகோவிந்தம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் பிஸியான நடிகையாகிவிட்டார். தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அப்போது ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், உடல்நலம் சரியில்லாத சமயத்தில் கூட ஓய்வுவெடுக்காமல் படங்களில் நடித்து வருவதாகக் கூறினார்.

ஓய்வில்லை

ஓய்வில்லை

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, " கடந்த மூன்று ஆண்டுகளாக நான் ஓய்வெடுக்கவே இல்லை. இரண்டு மாதங்களில் நான்கு முறை உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நடித்து வருகிறேன். எனது உடலுக்கும், மனதுக்கும் நானே அழுத்தம் கொடுக்கிறேன்.

சளிப்பிரச்சினை

சளிப்பிரச்சினை

இப்போது கூட சளிப்பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருகிறேன். வேலை நிமித்தமாக தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பதால் இப்படி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. ஆனால் எனக்கு அது பற்றி பெரிய கவலை இல்லை. எனக்கு சந்தோஷம் தான்.

செம பிஸி

செம பிஸி

நான் தற்போது ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். காலை ஒரு மாநிலம், மதியம் வேறு மாநிலம், இரவு மற்றொரு மாநிலம் என நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை படங்களில் நடித்தாலும், அதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

நான் அதிக சம்பளம் கேட்பதாக சில பேர் புகார் கூறுகிறார்கள். எனக்கு எப்போதும் பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஒரு படம் தோல்வி அடைந்தால் அது ஹீரோவுக்கான பாதிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அதனால் ஹீரோயின்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே படம் முக்கியமல்ல. நாம் அந்த படத்திற்காக எவ்வளவு உழைக்கிறோம் என்பது தான் முக்கியம்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். அப்போதும் நான் வெளியூர் படப்பிடிப்பில் தான் இருந்தேன். எனது உடல் மோசமான நிலையில் இருந்தபோதும் நான் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். நான் போராடும் குணம் படைத்தவள். எனவே எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

உடல் நலம் முக்கியம்

உடல் நலம் முக்கியம்

வேலை பார்ப்பது மட்டும் முக்கியமல்ல. உடல் நலன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளவது அவசியம் என்பதை இப்போது உணர்கிறேன். தற்போது நான் ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடிக்கிறேன். ஆனால் அது தவறான விஷயம். இனி இந்த தவறை செய்யக் கூடாது என நினைக்கிறேன்.

தெளிவான முடிவு

தெளிவான முடிவு

ஒரு சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அப்போது தான் படத்தில் நன்றாக நடிக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறேன். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாளாவது ஓய்வெடுக்க முடியுமா என ஏங்கிக்கிடக்கிறது எனது உடல்", என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X