பெண்கள் பிடிச்சவன் கூட போனா தப்பா.. சரக்கு அடிச்சா தப்பா... ரேகா நாயரின் சர்ச்சையான பேட்டி!
சென்னை: நடிகை ரேகா நாயர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள்அழகர் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, பல சீரியல்களில் நடித்து வந்த இவர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் தனது கருத்துக்களை தைரியமாக சொல்லக்கூடிய ரேகா நாயர் தற்போது youtube சேனல் ஒன்றுக்கு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், நான் ரேகா நாயர் என்பதை விட ரேகா என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் நாயரா... என்பது எனக்கே தெரியாது. எப்பொழுதுமே என்னை பார்ப்பவர்கள் பலர், ரேகா எப்படி ஃபயராக இருக்கிறார் என்று கேட்பார்கள். நிறைய அடி வாங்கும் போது ஆட்டோமேட்டிக்காக ஃபயர் பற்றிக்கொள்ளத்தானே செய்யும், அதுபோலத்தான் நான் அடி வாங்கி, அடிவாங்கி ஃபயராகி விட்டேன். என்னை பார்க்கும் பலர் ரேகா எப்படி எவ்வளவு போல்டாக இருக்கிறார் என்று நினைப்பார்கள். ஆனால் நான் உண்மையில் ஒரு போல்டான பெண் கிடையாது மிகவும் மென்மையானவள். இன்னும் அழகாக சொல்ல வேண்டும் என்றால், மல்லிகைப்பூ, பஞ்சை போல மென்மையாகத்தான் நான் இருப்பேன். மல்லிக்கைப்பூவை கையில் கொடுத்தால் அதன் அழகை ரசித்து விட்டு தலையில் வைத்துக்கொண்டால் அது அழகு. ஆனால், கையில் கிடைத்த மல்லிகை பூவை கசச்சினால், அந்த பூ விரல்களில் இடுக்கில் அதன் இதழ்கள் வெளியே வந்துவிடும் அப்படி, கசக்கப்பட்டு இதழ்களாக வெளியே வந்தவள் நான்.

எல்லாரும் துரோகிகள் இல்லை: இங்க வாழனும்னா நிறைய விஷயத்தை ஃபேஸ் பண்ணனும், இங்கே இருப்பவர்கள் அனைவரும் நல்லவங்கன்னு, நான் சொல்லவே மாட்டேன். அதே சமயத்துல எல்லாருமே துரோகிகளாக இருக்க வாய்ப்பில்லை. பலர் என்னிடம், தைரியமா இருக்கீங்க, போல்டா இருக்கீங்க என்று சொல்கிறார்கள். நான் அப்படி தைரியமாக இல்லை, நான் அவர்களைப் போல, பொய் சொல்லாமல் எனக்கு நான் உண்மையாக இருக்கேன். எல்லாரும் மறச்சு வாழ்றாங்க, என்னால மறைக்க முடியல, எல்லாரும் யாரோ ஒருத்தர் ஏமாற்றிவிட்டதாக நினைத்துக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். எனக்கு என்னை ஏமாற்றிக் கொள்வது பிடிக்காது. நான் அழகா இல்லன்னா உடனே பியூட்டிபார்லருக்கு போய்டுவேன். என்னுடைய ஐ ப்ரோ சரியில்லை என்று நினைத்து விட்டால், உடனே பார்லர் போய்விடுவேன், அது எனக்கு கான்ஃடபிளா இருக்கும், எனக்கு தன்நம்பிக்கையை கொடுக்கும், இன்னொருத்தவங்க சொல்ற அளவுக்கு நான் எப்போதும் வச்சுக்க மாட்டேன்.

இப்படி ஒரு வாழ்க்கை தேவையா: வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் பெண்கள் பலர், பயந்து கொண்டே இருக்கிறார்கள். கணவரை பார்த்து பயப்படுகிறார்கள். மாமனார், மாமியாரை பார்த்து பயப்படுகிறார்கள். தவறு ஏதாவது செய்திருந்தால் அவர்களிடம் சொன்னால் திருத்திக் கொள்வார்கள். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் பயம், அந்த பெண்ணை தொடர்ந்து பொய் சொல்ல வைத்துக் கொண்டே இருக்கிறது. தன்னை தானே இழந்து ஒரு வாழ்க்கையை தேவையா... அப்படி ஒரு வாழ்க்கை தேவையே இல்லை. யாருமே இல்லாமல், என்னால தனியாக இந்த உலகத்தை எதிர்த்து நிற்கக்கூடிய நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. இதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
காதில் வாங்கிக்கொள்ளமாட்டேன்: கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது கருப்பாக இருந்ததால் பலர் என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள். அதை நினைத்து நான் பல நாட்கள் அழுது இருக்கிறேன். ஆனால், அதன் பிறகு தான் அவர்களுடைய மனநிலை தெரிந்து கொண்டேன். நான் கருப்பாக இருந்தாலும் விமர்சிப்பார்கள், வெள்ளையாக இருந்தாலும் விமர்சிப்பார்கள், புடவை அணிந்து சென்றாலும் விமர்சிப்பார்கள், புடவை அணியவில்லை என்றாலும் விமர்சிப்பார்கள். எது செய்தாலும், ஏதாவது ஒரு விமர்சனம் வந்து கொண்டு தான் இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பிறகு எதைப் பற்றியும் நான் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு நான் வந்துவிட்டேன். அந்த மனநிலைக்கு, என்னை இந்த சமூதாயம் தான் தள்ளிவிட்டது.

பிடிச்சவன் கூட போனா தப்பா: பெண்கள் எந்த இடத்தில் எல்லா இருக்கிறார்களோ அந்த இடத்தில் எல்லாம் பெண்களுக்கு என்று பாலியல் ரீதியான பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு பிரச்சனை இல்லாத இடங்களே இல்லை. இந்த சமுதாயத்தில், எது செய்தாலும் சரி என்கிற மனப்பான்மைக்கு வந்துவிட்டது. சமுதாயத்தில் இருக்கும் அழுக்குகளை எடுக்க வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. மாறாக தண்ணி அடித்தால் தப்பா... டான்ஸ் ஆடினால் தப்பா.. பெண்கள் பிடித்தவன் கூட போனால் தப்பா என்கிற மனப்பான்மைக்கு இந்த சமுதாயம் வந்துவிட்டது. இதனால், யாரை குற்றம் சொல்வது என்றே தெரியவில்லை. என்ன பொருத்தவரை பெண்கள் சினிமா துறைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டால், அவர்களுக்கு நான் கொடுக்கும் அட்வைஸ் வேண்டாம் என்று தான் சொல்லுவேன். ஏனென்றால் இங்கு மரியாதை இருக்காது, நிரந்தரம் இல்லாத வேலை, சம்பளம் அவ்வளவு சீக்கிரமாக வராது. இப்படி எதுவுமே இல்லாத போது எதுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
நான் என்ன உன் பொண்டாட்டியா: நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'இரவின் நிழல்' படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இந்தக்காட்சி குறித்து விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், தனது யூடியூப் சேனலில், பார்த்திபன் ஒரு மார்பகத்தை காட்ட சொன்னால், ரேகா இரண்டு மார்பகத்தையும் காட்டவா என்று கேட்டதாக, ரேகாவை மிகவும் மோசமாக விமர்சித்து இருந்தார். இதனால், கடுப்பான ரேகா நாயர், திருவான்மியூர் கடற்கரை அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை வழி மறித்து வாக்கு வாதம் செய்தார். மேலும், நான் அந்தப்படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேனா.. நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் உனக்கு என்ன அதில் அக்கறை, நான் என்ன உன் மனைவியா.. இல்லை உன் மகளா.. அப்படியே நடித்திருந்தாலும் அது பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை என்று வாக்குவாதம் செய்தார். அப்போது பயில்வான் ரங்கநாதனை, நிர்வாணமா நடிச்சா அப்படித்தான் பேசுவேன் என்று சொல்லி, ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ரேகா நாயர் செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்தார்.


Click it and Unblock the Notifications