எனக்கு 99 புருஷன்..100வதா நீ வரியா.. ஆபாசக் கமெண்ட் போட்டவனுக்கு ரேகா நாயர் கொடுத்த பதிலடி!

சென்னை: சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை ரேகா நாயர், இயக்குநர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெரும் நடிகையாக மாறினார். அந்த படத்தில் அவர் அரைநிர்வாணமாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அவரது தைரியமான நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

நடிகை ரேகா: தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கும் ரேகா, பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், நான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், சீரியல்களில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். சீரியலில் நடிகர், நடிகைகளுக்கு சரியான மரியாதை இல்லை, நல்ல சாப்பாடு இல்லை, உரிய சம்பளம் இல்லை. மதிப்பும், மரியாதையும், சம்பளமும் இல்லாத இடத்தில் ஏன் இருக்க வேண்டும்? அதனால்தான் அந்த துறையை விட்டு விலகினேன் என்றார்.

Rekha Nair interview

பெண்ணை குற்றம் சாட்டுவது ஏன்: தொடர்ந்து பேசிய ரேகா, இந்த சமூதாயத்தில் பெண்கள் மீதான பாதை எப்போதும் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அது மாற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தன்னுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறேன். அதற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்கிறேன் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை இந்த சமூகம் மிகவும் எளிதாக பயன்படுத்துகிறது. ஆனால் அதே செயல்களில் ஈடுபடும் ஒரு ஆணை யாரும் அதே வார்த்தைகளால் விமர்சிப்பதில்லை. ஒரு பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்? தவறு செய்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட ஆணையைம் அதே பெயரில் தானே அழைக்க வேண்டும் என்றார்.

எனக்கு 99 புருஷன்: இந்த கேள்விகளை நான் கேட்பதால், என் பதிவுகளுக்கு கீழ் உனக்கு எத்தனை புருஷன் என கேட்டு ஒருவர் கமெண்ட் போட்டு இருக்கிறார். எனக்கு எத்தனை புருஷன் இருந்தால் அவருக்கு என்ன, யாரு கூட வாழ்ந்தால் அவருக்கு என்ன... இந்த கமெண்டை பார்த்து நான் ஒடுக்கி போகாமல் எனக்கு 99 புருஷன், 100வது புருஷனாக நீ வரியா என்று துணிச்சலாக கேட்டேன் இதுபோல எத்தனை பெண்கள் கேள்வி கேட்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பெண்கள் ஏதாவது கருத்தை பகிர்ந்தால் அவர்களை இந்த மோசமான சமூகம் இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு அவளை அமுக்கி விடுகிறது. இது தான் மாற வேண்டும், பெண்கள் மீது இழிவான விமர்சனங்களை முன்வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும், சமூகத்தில் பெண்களை மதிக்கும் மனப்பான்மை உருவாக வேண்டும் என ரேகா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X