மார்பு, இடுப்பு.. எப்படி டிரஸ் போட்டாலும் ஆம்பள பார்ப்பான்.. நீ ஏன் கழட்டி காட்டுற.. ரேகா நாயர்!

சென்னை: பெண்கள் மீதான ஆடைக் கட்டுப்பாடு என்பது தொடர்கதையாக உள்ளது
பல பெண் ஆடை அணிவது என்பது எங்களின் உரிமை என்றும், ஆண்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம், ஆண்களின் பார்வையில் தவறு இருக்கிறது என்ற விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலும், பாலியல் ரீதியிலான சீண்டலுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுவதற்கு கவர்ச்சியாக ஆடை அணிவது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆடை விஷயம் குறித்து வாவ் தமிழா youtube சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை ரேகா நாயர், நான் பொதுவாகவே ஆடை விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கக்கூடியவள். ஆண்கள் பார்க்கிறார்கள், பெண்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக இல்லை எனக்காக நான் அப்படி இருக்கிறேன். நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கலாம், கோவிலில், குறைந்தபட்சம் நாகரீகமாக உடை அணிந்து செல்ல வேண்டும். சிலர் கேட்பார்கள் ஏன் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கோயிலுக்கு போக கூடாதா என்று, தாராளமாக போகலாம். ஆனால், அங்கு வரும் கேளிக்கும், கிண்டல்களையும் சமாளிக்க கூடியவராக நாம் இருக்க வேண்டும்.

Rekha Nair interview
Photo Credit:

என்ன அர்த்தம்: 'துப்பட்டா போடுங்கள் தோழி' என்று ஒரு புத்தகமே இருக்கிறது. எந்த இடத்தில் துப்பட்டாவை போட வேண்டும், எந்த இடத்திற்கு போகும்போது துப்பட்டாவை போடக்கூடாது என்பதையும் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆடை அணிய வேண்டும் என்பதற்காக பல போராட்டங்கள் இந்த நாட்டில் நடந்து இருக்கிறது. உடலின் அங்கங்களுக்கு வரி போட்ட நாட்டில், ஆடை அணிவதற்கு என்று போராட்டம் நடத்திய நாட்டில் ஆடையை கழட்டி போட்டுவிட்டு ஆடுவேன் என்றால் என்ன அர்த்தம். அப்படி ஆடுபவர்கள் ஆடட்டும் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதைப் பார்த்துவிட்டு கிண்டல் அடித்தால், என்னை ஏன் இப்படி பேசினான் என்று அவர்களிடம் சண்டையிடக்கூடாது.

அம்மணமாக திரிகிறார்கள்: அனைவரும் உடலை மறைப்பதாக நினைத்துக் கொண்டு அம்மணமாக திரிகிறார்கள். அதுதான் இப்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம். சில ஆண்களுக்கு கண்ணை பார்த்தாலே கிக் ஏறும், கண்ணுக்கு என்ன ஆடை உடுத்துவது. புடவை கட்டினாலும் இடுப்பை பார்ப்பார்கள், சுடிதார் அணிந்து துப்பட்டா போடவில்லை என்றால் கழுத்துக்கு கீழ் பார்ப்பார்கள், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருந்தால் கைகை பார்ப்பார்கள், பர்தா அணிந்திருந்தாலும் பார்ப்பார்கள். இதனால், பார்ப்பவர்கள் எப்படி உடை அணிந்திருந்தாலும் பார்க்க தான் செய்வார்கள். ஆண்கள், அதுபோன்ற ஒரு மனநிலையில் இருக்கும் போது அவர்களிடம் உடையை கழட்டி காட்டி, நாமே ஏன் பிரச்சனைகள் சிக்கிக் கொள்ள வேண்டும். கவர்ச்சியாக உடை அணிவதால், பாலியல் சீண்டல்களும், கற்பழிப்புகளும் நடப்பதில்லை. ஆனால், அதுவும் ஒரு காரணம்.

இதுபோன்ற மனநிலையில் ஆண்கள் இருப்பதற்கும் காரணம் பெண்கள் தான். ஆம்பள பெண்களின் கஷ்டம் குறித்தும், அவர்களை நாம் எப்படி கண்ணியமாக பார்க்க வேண்டும் என்பது குறித்தும் பெண்கள் தான் எடுத்து சொல்ல வேண்டும். ஆனால், பல அம்மாக்கள் அதை செய்வதே இல்லை. அது தான் ஆண்களுக்கே இப்போது பிரச்சனையாக மாறி உள்ளது என்று நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X