யாரிடமும் இல்லாதது நித்யானந்தாவிடம் இருக்கு.. அவரை எனக்கு பிடிக்கும் ..ரேகா நாயரின் அடுத்த அதிரடி!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டால் அழகர் சீரியல் மூலம் பிரபலமான ரேகா நாயர். பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் வெளியானதற்கு பிறகு, சோஷியல் மீடியாவில் பிரபலமான இவர், தைரியமாக பல கருத்துக்களை முன்வைத்து பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், Tamil Movie World Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விஷயம் குறித்து பேசி இருக்கும் இவர் நித்தியானந்தா குறித்து பேசி உள்ளார்.

இரவு நிழல் படத்திற்கு பிறகு வந்த சர்ச்சையால் நான் எந்த இடத்திலும் ஸ்டக்காகவில்லை. நான் சிறிய வயதிலிருந்தே பல விஷயங்களை, பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். இப்போதும் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த படத்தில் அதுபோன்ற காட்சிகளில் நடித்ததால், தான் என்னை விமர்சனம் செய்கிறார்கள் என்றெல்லாம் இல்லை. எப்போதுமே, யாராவது ஏதாவது ஒரு விஷயம் குறித்து பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். அப்படி பேசிய சில விஷயம் என் காதிற்கு வந்ததால், நான் சட்டை போட்டேன். மற்றபடி, தொடர்ந்து நான் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான்கு படங்களில் நடித்து முடித்து விட்டேன். அந்த படம் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

Rekha Nair Nithyananda interview

நடிகை ரேகா நாயர்: அதேபோல பார்த்திபன் சார் எப்பொழுது அழைத்தாலும் அவரது படத்தில் நான் நடிப்பேன். அவர் ஒரு இயக்குனர் நான் ஒரு நடிகை. எந்த இயக்குனர் அழைத்தாலும் எனக்கு அந்த கதாபாத்திரம் பிடித்திருந்தால் நிச்சயமாக நடிப்பேன். இயக்குனர் என்கிறவர்கள் ஒரு கடவுள் போன்றவர்கள். அவர் என்ன கேட்கிறாரோ அதுபோன்று நடைத்துக் கொடுப்பதுதான் ஒரு நடிகையின் கடமை. அதை விட்டுவிட்டு நான் இந்த கதாபாத்திரத்தில் இப்படி நடிக்க மாட்டேன் என்று சொல்வதால் என்றைக்குமே நடிகையாக முடியாது. நான் சினிமாக்குள்ள வந்ததுனால இப்படி நடிக்கிறேனா.. நான் இப்படி நடிக்கறதுனால நம்மள டைரக்டர்ஸ் அது போன்ற கதாபாத்திரத்திற்கு டி கூப்பிடறாங்களே என்பது கிடையாது விஷயம். ஆசைக்காக சில பேர் சினிமாவில் நடிக்க வருகிறார்கள். அவர்களை நான் லிஸ்டிலேயே சேர்க்க வில்லை.

Rekha Nair Nithyananda interview

நான் அப்படி நடிப்பேன்: ஒரு கதைக்கான நாயகியை தேடும் போது அதன் கதாநாயகன் இயக்குனர் தான். இவர் தான் அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார். இதனால், என் முடிவில் நான் எப்போதும் தெளிவாக இருக்கிறார். பார்த்திபன், சேரன், அமீர் என எந்த இயக்குனர்கள் என்னை அழைத்தாலும் எனக்கு கதை பிடிக்கிறதா என்பதை விட அந்த கதாபாத்திரத்தில் அதுபோன்ற காட்சி தேவை என்றால் கண்டிப்பாக நான் நடித்துக் கொடுப்பேன். நான் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன் என்று நான் ஒரு போதும் சொல்லவே மாட்டேன். ஏனென்றால் இந்த இடத்திற்கு வருவதற்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன், இவ்வளவு ஆசைகளை சுமந்து இருக்கிறேன், எவ்வளவு கனவுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். நான் சொல்லும் போது உங்களுக்கு இது ஒரு கதையாக தெரியலாம் ஆனால் அதனுடைய வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

Rekha Nair Nithyananda interview

மன நிம்மதிக்காக: தொடர்ந்து பெண்கள் குறித்து பேசிய நடிகை ரேகா நாயர், மத போதகர்கள், சாமியர்களை பெண்கள் கண் மூடித்தனமாக நம்பிக்கை வைக்கிறார்கள். இதற்கு காரணம் ஏதோ ஒரு நம்பிக்கை, ஏதோ ஒரு இடத்தில் டவுன் ஆகும் போது, அவர்களுக்கு ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. தடுக்கி விழும் போது தூணை பிடிக்கிறார்கள். ஆனால், பிடித்தது கரண்ட் கம்பியா அல்லது சந்தன மரமா என்று யோசிப்பதில்லை. அந்த நேரத்துல அவர்களுக்கு கிடைப்பதை மட்டும் தான் பார்க்கிறார்கள். நான் எல்லா கோயிலுக்கும் போயிருக்கேன். சர்ச் போயிருக்கேன், பள்ளிவாசல், இந்துக்களின் ஸ்தளங்களுக்கு போயிருக்கேன். எல்லா ஊர்ல இருக்குற எல்லா கோயிலுக்குமே நான் போயிருக்கிறேன். எங்கேயுமே நான் கடவுளை பார்த்ததே இல்லை, எங்கேயுமே எந்த கடவுளும் என் கூட பேசுனது இல்லை. ஜீசஸ்சும் பேசுனது இல்ல, அல்லாவும் பேசினது இல்ல, சிவன் பார்வதி இப்படி எந்த கடவுளும் என்கிட்ட பேசுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு நம்பிக்கை கிடைக்கிறது, அந்த இடத்திற்கு போனால் மனம் அமைதியாக இருக்கிறது என்பதால் நான் போகிறேன்.

Rekha Nair Nithyananda interview

நித்தியானந்தாவை ரசிப்பேன்: எனக்கு நித்தியானந்தாவை ரொம்ப பிடிக்கும். இந்த சமுதாயம் அவரை ஒரு மாதிரியாக பேசினாலும் கூட, அவருடைய வார்த்தைகள் நம்பிக்கை அளிக்க கூடியதாக இருக்கும். மிகவும் மனம் சோர்வாக இருக்கும் போது அவருடைய பேச்சை கேட்டால், நகைச்சுவையாக இருக்கும். அவர் அருகில் சென்று பேச வேண்டும் என்று நினைக்கும் பெண்களை நீங்கள் தடுக்கவே முடியாது. இதுபோன்ற நபர்களிடம் ஒரு பெண்ணோ, ஒரு கூட்டமோ சென்று விட்டால் அதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது. என்னுடைய தோழி ஒருவர் ஈஷா மையத்தில் சிக்கிக்கொண்டு அங்கேயே இருக்கிறாள். இந்த இடத்தை விட்டு வரமாட்டேன், இங்கேதான் இருப்பேன், இங்கேதான் எனக்கு சுகம் என்கிறாள். குடும்பத்தில் ஏதோ ஒன்றை தொலைத்து விட்டு பெண் இது போன்ற மத போதகர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள். இங்கேயும் கிடைக்காதது நித்தியானந்தாவிடம் கிடைக்கிறது, ஜிக்கியிடம் கிடைக்கிறது, ஃபாதரிடம் கிடைக்கிறது. அப்படி என்ன கிடைக்கிறது என்பது கிடைத்தவர்களுக்கும் கொடுப்பவர்களுக்கு தான் தெரியும். ஆனால், எனக்கு நித்தியானந்தாவை பிடிக்கும், அவருடைய பேச்சை நான் ரசித்து கேட்பேன் என்றார்.

எனக்கு எப்போதுமே கோவம் அதிகமாக வரும், என்னுடைய கோபத்தை குறைக்க வேண்டும் என்று பல நாளாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். அதை என்னால் செய்ய முடியவில்லை. அதேபோல என்னுடைய குடும்பத்தில் கணவருடன் சண்டை, மகளுன் நடக்கும் பிரச்சனைகளுக்காக நான் கோபப்பட மாட்டேன். இந்த சமுதாயத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதற்காக முன் வந்து தெருவிற்கு வந்து சண்டை போடுவேன். அது என்னுடைய சிறு வயதிலிருந்தே என்னுடைய பழக்கம். ஆனால், பல நேரங்களில் கொஞ்சம் கோபப்படாமல் இருந்திருக்கலாமோ என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால், அந்த கோபத்தால் தான், நான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான் என்றும் நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் பல விஷயம் குறித்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X