நல்லதை ஷேர் பண்ணுங்க... கெட்டதை ஷேர் பண்ணாதீங்க - நடிகை ரேகா
Recommended Video
சென்னை: நானும் ஒருநாள் ரஜினி கூட ஜோடியாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் கடலோர கவிதைகள் ரேகா. சமீபகாலமாக ரேகாவைப்பற்றி பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவர் தனக்காக கல்லறை கட்டியுள்ளதாக செய்தி வெளியானது. அதே போல அவர் இறந்து விட்டதாகவும் அஞ்சலி செலுத்துவதாகவும் செய்தி வெளியானது. இதனால் கொதித்து போய் விட்டார். நமது பிலிமி பீட் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.
கடலோர கவிதைகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரேகா கமலுடன் புன்னகை மன்னன் படத்தில் நடித்தார். தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர், மீண்டும் 2002 ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா கூட்டம்' படம் மூலம் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்து ரீ எண்ட்ரி ஆனார். தற்போது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரேகா, தர்மபிரபு படத்திற்குப் பிறகு ரொம்ப பிஸியாகிவிட்டார்.
பிஸியான ரேகாதான் இறந்து விட்டதாக பலர் கிளப்பிவிட்டுருக்கின்றனர். அதைப்பார்த்து பலரும் துக்கம் விசாரித்து வருகின்றனர். இதுதான் ரேகாவை கடுப்பேற்றி விட்டது.

நல்லதை ஷேர் பண்ணுங்க
நான் இறந்து எனக்கு பெரிய நடிகர் அஞ்சலி செலுத்துவது போல சித்தரித்துள்ளனர். இதனால் பலர் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். யார் யாரோ யூ டியூப் சேனல் தொடங்கி இப்படி என்னை பற்றி பேசுகிறார்கள். அவர்களின் வருமானத்திற்காக இப்படி தவறாக செய்கிறார்கள். நல்ல விசயத்திற்காக ஷேர் பண்ணுங்கப்பா.

பொறுப்பு வேண்டாமா
கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இவர்கள் இப்படி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் சிலர் போன் செய்து செத்து போய்ட்டியா என்று என்னிடமே கேட்கின்றனர். நான் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என்று விஜய் சார் சொன்னதை கேட்டு, அதை போலவே அமைதியாக இருக்கிறேன்.

வதந்தி வேண்டாம்
என்னை பற்றி ஏன் தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என் உறவினர்கள் இதனால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா? இதன் மூலம் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எதற்கு? இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்

பாசமான மகள்
நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் என்னோட அப்பா பார்த்திக்கிறார். சினிமாவில் நடிப்பது அப்பாவிற்கு பிடிக்காது அதற்குக் காரணம் தன் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும் தான் என்றும் கூறினார். நான் அப்பாவின் அன்பான மகள். பாசமான மகள். சினிமாவையும் குடும்பத்தையும் இணைக்க மாட்டேன்.

நான் ரொம்ப பிஸியாக்கும்
ரொம்ப நாளாக ரஜினி கூட நடிக்க ஆசை நானும் ஒருநாள் ரஜினி கூட நடிப்பேன். இப்போ சிம்ரன் கூட பேட்ட படத்தில் நடித்திருக்கிறார்.
இப்போ சண்டைக்காரி, குஸ்கா, ரயில்வே சிதம்பரம் கேட் என படங்கள் வரிசையாக நடித்துக்கொண்டிருக்கிறேன். 2019 மட்டுமல்ல 2020ஆம் ஆண்டிலும் நடிக்க நிறைய படங்கள் இருக்கின்றன என்று மகிழ்ச்சியுடன் கூடிய ரேகாவிற்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.


Click it and Unblock the Notifications











