ராஜூவை நான் பார்க்கவில்லை, இசைவாணி மட்டும் தான் தெரியும்...சொன்ன பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா ?

சென்னை: கடந்த மூன்று மாதங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல பிரபலங்கள் தொடர்ந்து பல கருத்துக்களை சொல்லி வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் வின்னர் சொன்ன கருத்தைப் பற்றி இந்த பேட்டியில் பார்க்கலாம்.

Recommended Video

" பிக் பாஸ் பாத்தீங்களா? " Rithvika Interview | Sila Nerangalil Sila Manithargal | Filmibeat Tamil

சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் நடித்த நடிகர்களை உலக நாயகன் கமலஹாசன் பாராட்டியதையும், பெயர்களை நடிகர் கமலஹாசன் தனது கையால் எழுதியதை போட்டோ எடுத்து அனுப்ப சொல்லியிருப்பதாக நடிகர் ப்ரவீன் சந்தோஷமாக கூறினார்.

சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தில் நடித்திருக்கும் ப்ரவீன், ரித்விகா ஆகியோரிடம் நடத்திய நேர்காணலில் பேசிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் பின் வருமாறு பார்ப்போம்.

இயக்குனர் குறித்து

இயக்குனர் குறித்து

கேள்வி: ப்ரவீன், ரித்விகா நீங்கள் இப்பொழுது இருக்கிற மாதிரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தீர்களா?

பதில் : இல்லை. நாங்க இரண்டு பேருமே ரிசர்வ் டைப். பேச மாட்டோம். ஏனெனில் ஒரு நாளைக்கு நான்கு சீன் ஷூட் பண்ணுவாங்க. அதற்கு தயாராவதற்கு எங்களுக்கு நேரம் சரியாக இருக்கும் என்றார் ரித்விகா.

ப்ரவீன் கூறுகையில், நானும், இயக்குனர் விஷாலும் 10 வருட நண்பர்கள். விஷால் எனக்கு ஜூனியர். மேலும் மணிகண்டன், மவுலி, மெர்சி விஜய் ஆகியோர் 15 வருட நண்பர்கள். அதனால் என்னுடைய பணியை சிறப்பாகவும், ஜாலியாகவும் செய்ய முடிந்தது.

எனக்கு பிடிச்ச கதாபாத்திரம்

எனக்கு பிடிச்ச கதாபாத்திரம்

கேள்வி: ரித்விகா, நீங்கள் கயலாக மாறியது எப்படி?

பதில் : இந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நான் ஒரு எதார்த்தமான மனைவியாக நடித்துள்ளேன். இதற்கு நான் ரொம்ப சிரமப்படவில்லை. ஸ்கிரிப்ட் படிப்பதற்கு மட்டும் ஒரு நாள் பயிற்சி எடுத்தேன். இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அமையும் போது ஒரு தனி ஈடுபாடு வரும் என்பது தான் உண்மை .

மற்ற கதாபாத்திரங்கள்

மற்ற கதாபாத்திரங்கள்

கேள்வி: இந்த படத்தின் திரைக்கதை அல்லது ஸ்பெஷல் அப்டேட் என்ன?

பதில்: க்ளைமாக்ஸ் பற்றியோ காட்சிகள் பற்றியோ இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது என்று இருவரும் சிரித்தபடி ... இந்த திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களை சந்திக்க முடியாத சூழலும், ஒரு கதாபாத்திரம் மட்டுமே இந்த கதையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும். நமது வாழ்க்கையில் பல நபர்களை சந்திப்போம். ஆனால் அந்த நபர்களில் ஒரு நபர் மட்டுமே நமது வாழ்க்கையில் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அதுபோலதான் இத்திரைப்படத்தின் திரைக்கதையும் என்று இரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தார்கள்.

அனைவருக்கும் முக்கியத்துவம்

அனைவருக்கும் முக்கியத்துவம்

கேள்வி: ரித்விகா உங்களுக்கு பிடிச்ச மற்ற கேரக்டர்கள் யார்?

பதில் : இந்த திரைப்படத்தில் அனைவருக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் அசோக்செல்வன் & ரியா ஆகியோரது கதாபாத்திரமும், மணிகண்டனின் கதாபாத்திரத்தையும் நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். அவரகள் இந்த படத்திற்காக அதிகம் அக்கறையுடன்,பொறுப்பதன் நிறையவே செயல்பட்டார்கள்.

பிக் பாஸ் டீம்

பிக் பாஸ் டீம்

கேள்வி : ரித்விகா பல ரசிகர்கள் உங்கள் கருத்தை பிக் பாஸ் முன்னிட்டு கேட்டு உள்ளார்கள்

பதில் : பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூவை நான் பார்க்கவில்லை. ஆனால் இசைவாணியை எனக்கு தெரியும் என்று பிக்பாஸ் ரித்விகா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க நேரம் இல்லை என்றும் இந்த முறை இருக்கும் அதிக கன்டெஸ்டெண்ட்ஸை நான் அதிகம் சந்தித்தது இல்லை என்றும் சொல்லி உள்ளார் .

ஜெயகாந்தன் நாவல்

ஜெயகாந்தன் நாவல்

கேள்வி: நேயர்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது?

பதில் : இந்த படத்தின் டைட்டில் சில பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஜெயகாந்தன் எழுதிய நாவல் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. இந்த டைட்டிலுக்காக படம் பார்க்க மக்கள் வருவார்கள். ஆனால் படம் முடிந்து வெளியே வரும்போது மக்களுக்கு சின்ன சந்தோஷம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மேலும் இந்த வீடியோ பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ன. ஃபிலிமிபீட் தமிழ் யூட்யூப் லிங்க்கை கிளிக் செய்து முழு வீடியோவையும் பார்க்கலாம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X