நல்ல கதையா.. மொட்டை அடிக்கத் தயாருங்க.. நான் ரெடி.. ரித்திகா சிங் அதிரடி!
Recommended Video
சென்னை : நல்ல கதாபாத்திரத்திற்காக மொட்டை அடிக்கவும் நான் தயார் என்று ரித்திகா சிங் ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.
நடிகை ரித்திகா சிங் சிவலிங்கா படத்திற்குக்கு பிறகு தமிழில் நடித்திருக்கும் படம் தான் ஓ மை கடவுளே. இந்த படத்தில் நடிகர் அசோக்செல்வன் நாயகனாகவும் மற்றொரு நாயகியாக வாணிபோஜனும் நடித்து உள்ளனர். இந்த படம் காதலர் தினத்திற்கு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து உள்ளது படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார் .

ரித்திகா சிங்கிற்கு பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது ஓ மை கடவுளே படம். இறுதிச்சுற்று மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரித்திகா சிங் . தனது முதல் படத்தில் நடிக்கும் போது ரித்திகாவிற்கு 19 வயது தானாம். தற்போது ரித்திகாவிற்கு 25 வயது இப்போது நல்ல தெளிவு வந்து விட்டது என ரித்திகா ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார்.
ஓ மை கடவுளே படத்தில் அனு என்ற கதபாத்திரத்தில் நடித்துள்ளார் ரித்திகா . இறுதிச்சுற்று படத்தில் எழில்மதி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் ரித்திகா . இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது என ரித்திகா கூறியுள்ளார். மேலும் அனு கதாபாத்திரம் மிக நல்ல கதாபாத்திரம் என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் .

ரித்திகா கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது ஒருவன் பின் தொடர்ந்து வந்து ரித்திகாவின் மேல் கை வைக்க முயன்றாராம், அப்போது ரித்திகா சுதாரித்து கொண்டு அடித்து வீழ்த்தி விட்டாராம். பின்னர் தான் தெரிந்ததது அவன் ஒரு குடிகாரன் என்றும் போதையில் வந்து இப்படி நடந்திருக்கிறான், இந்த சம்பவத்தின் மூலம் தான் ஒரு தைரியமானபெண் என்றும் கூறிக்கொண்டார்.
மேலும் ரேப் போன்ற பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கண்டிப்பாக கடுமை காட்ட வேண்டும் அவர்கள் இருக்கவே கூடாது கொல்ல வேண்டும் என கோபத்துடன் கூறினார்.

ரித்திகா சிங் கடுமையான சவால் மிக்க கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதே போல நல்ல கதாபாத்திரம் கிடைத்து மொட்டை அடிக்கும் நிலை வந்தாலும் தயங்காமல் செய்வேன் என உறுதியளித்துள்ளார். ரித்திகா அடுத்ததாக அருண்விஜய் உடன் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











