"டார்ச்லைட்.. நான் ஏன் பாலியல் தொழிலாளியாக நடித்தேன் தெரியுமா?".. நடிகை சதா Exclusive

டார்ச்லைட் படம் நிச்சயம் மக்களை கலங்க வைக்கும் என நடிகை சதா தெரிவித்துள்ளார்.

Recommended Video

'டார்ச்லைட்' படத்தில் நடித்த நடிகை சதாவின் நேர்காணல் Sadha shares her about 'Torchlight'

சென்னை: பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் டார்ச்லைட் படம் நிச்சயம் மக்களை அழ வைக்கும் என நடிகை சதா தெரிவித்துள்ளார்.

நடிகை சதா, தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்துள்ள படம் 'டார்ச்லைட்'. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை, விஜய்யை வைத்து 'தமிழன்' படத்தை இயக்கிய மஜீத் இயக்கியுள்ளார்.

'டார்ச்லைட்' படம், பாலியல் தொழிலாளர்களை பற்றிய கதை. இன்று ரிலீசாகியுள்ள இந்தப் படத்தில் நடிகை சதா, பாலியல் தொழில் செய்து வருபவராக நடித்துள்ளார்.

இந்நிலையில், டார்ச்லைட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சதா ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வலி நிறைந்த வாழ்க்கை:

வலி நிறைந்த வாழ்க்கை:

டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளேன். அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு வலி நிறைந்தது என்பது பற்றி இப்படம் பேசும். அதனால் தான் படத்தில் உள்ள வசனங்கள் கூட கடுமையானதாக இருக்கிறது.

கதை கேட்டு அழுதேன்:

கதை கேட்டு அழுதேன்:

நிறைய நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்க மறுத்ததாக இயக்குநர் கூறினார். நானும் இப்படத்தின் கதையை மூன்று முறை கேட்டேன். மூன்று முறையுமே நான் அழுதேன். சமீபத்தில் முழுப்படத்தையும் பார்த்தேன். அப்போதும் எனக்கு அழுகை வந்தது. அந்தளவுக்கு படம் உணர்வுப்பூர்வமானதாக வந்துள்ளது. நிச்சயம் இப்படம் மக்களையும் அழ வைக்கும் என நம்புகிறேன்.

கட்டுப்பாடு இல்லை:

கட்டுப்பாடு இல்லை:

முழுக்கதையையும் கேட்காததாலேயே இப்படத்தை மற்ற நடிகைகள் மறுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

ஏன் இந்த இடைவெளி?

ஏன் இந்த இடைவெளி?

தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துக் கொண்டிருந்ததால், இடையில் தமிழில் நடிக்க இயலவில்லை. டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன். அது மிகவும் ஜாலியாக இருந்தது.

பிக் பாஸ் ரித்விகா:

பிக் பாஸ் ரித்விகா:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா நன்றாகப் பண்ணுகிறார் எனக் கேள்விப்பட்டேன். நிஜத்திலும் அவர் மிகவும் நல்லவர். டார்ச் லைட் படத்திலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்" என சதா பாராட்டினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X