Sadha - அப்படி வேண்டாம் என இயக்குநரிடம் கெஞ்சினேன் கேட்கவில்லை.. வீட்டுக்கு சென்று அழுதேன்.. சதா ஓபன் டாக்

சென்னை: Sadha (சதா) நடிகை சதா ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

தெலுங்கில் 2002ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சதா. அந்தப் படம் தெலுங்கில் அதிபுதிரி ஹிட்டடித்தது. படத்தை தேஜா இயக்கியிருந்தார். அந்தப் படம் வெற்றியடைந்ததை கவனித்த எடிட்டர் மோகன் தனது இரண்டு மகன்களையும் சினிமாவில் அறிமுகமாக்க இந்தப் படத்தை பயன்படுத்திக்கொண்டார்.

Actress Sadha Shares about her first movie shooting spot experience

தமிழ் ஜெயம்: அதன்படி அதே பெயரில் தமிழில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. மோகனின் மூத்த மகன் ராஜா இயக்க, இளைய மகன் ரவி ஹீரோவாக நடித்தார். தெலுங்கு போலவே தமிழிலும் சதா இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார். படம் தமிழிலும் மெகா ஹிட்டடித்தது. அதனையடுத்து ரவி ஜெயம் ரவியாக மாறி முன்னணி ஹீரோவாக தற்போது இருப்பது அனைவரும் அறிந்தது.

சதா: ஜெயம் படத்தின் வெற்றி சதாவையும் பலரிடம் கொண்டு போய் சேர்த்தது. ஹோம்லியான முகம், நல்லபடியான நடிப்பு என அவருக்கு திறமை இருந்ததால் அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் அமைந்தன. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சதாவுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பாகவே நடித்தார். இருந்தாலும் ஒட்டுமொத்தமாக விக்ரம் ஸ்கோர் செய்துவிட்டார்.

தொடர் வாய்ப்புகள்: சதாவும் அந்தப் படத்தில் கவனிக்கப்பட்டதால் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தன. மாதவனுடன் பிரியசகி, அஜித்துடன் திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. தமிழில் அவர் கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Actress Sadha Shares about her first movie shooting spot experience

சதா பேட்டி: இந்நிலையில் சதா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தேஜா இயக்கிய படத்தில் ஒரு மோசனமான காட்சியில் நடித்ததை இப்போதும் வருத்தப்படுகிறேன். வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் என் கன்னத்தை நக்குவது போன்ற காட்சி இருந்தது.

எவ்வளவோ கெஞ்சினேன்: இந்த மாதிரியான காட்சியில் நடிக்க மாட்டேன் என சொல்லிப்பார்த்து ஒருகட்டத்தில் கெஞ்ச ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவோ கெஞ்சியும் அந்த இயக்குநரோ படத்தில் இந்தக் காட்சி வேண்டும் என்று சொல்லி படமாக்கிவிட்டார். அந்தக் காட்சியை நடித்து முடித்த பிறகு வீட்டுக்கு சென்று ரொம்பவே அழுதேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X