அப்பா இறப்பால் மொத்த குடும்பமும் உடைச்சு போச்சு.. அப்போ வந்த ரெடின் கிங்ஸ்லி.. மனம் திறந்த சங்கீதா!

சென்னை: க்ரூப் டான்சராக இருந்த ரெடின் கிங்ஸ்லி குறுகியகாலத்தில் பிஸியான காமெடி நடிகராக தனது தனித்துவமான நடிப்பால் பிஸியான நடிகராக மாறி உள்ளார். திருமணமே வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வந்த இவர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கும் நிலையில், சங்கீதா ரெடின் கிங்ஸ்லி மேல் எப்படி காதல் வந்தது என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நண்பரான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் கவனம் ஈர்க்கும் காமேடி நடிகராக மாறினார். அதைத்தொடர்ந்து டாக்டர், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர், திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், சென்னைக்கு வந்துவிட்டார். திருமணம் செய்து கொல்லாமல் 46 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த ரெடின் கிங்ஸ்லி, கடந்த 2023ஆம் ஆண்டு சீரியல் நடிகையும், சினிமா துணை நடிகையுமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். பெங்களுரில் இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பின்னர் சில திரை பிரபலங்கள் இவரது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். சீரியல் நடிகையான சங்கீதா, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதால், இவர்களின் திருமணம் குறித்து ஊரே பேசியது.

Redin Kingsley Sangeetha love
Photo Credit:

ரெடின் கிங்ஸ்லி: திருமணத்திற்கு பின் இருவரும் அடிக்கடி ஜாலியாக டூர் போன வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் திருமணம் ஆன ஒரு வருடத்திற்கு தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியாக தகவலை சங்கீதா அறிவித்தார். இதைத்தொடர்ந்து நடிகர் ரெடின் கிங்ஸ்லி, தனது மனைவிக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம், சங்கீதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சோஷியல் மீடியா பக்கங்களில் சங்கீதா பகிர்ந்து இருந்தார்.

அப்பா இறந்த போது: இந்நிலையில் சங்கீதா, தற்போது அளித்து இருக்கும் பேட்டியில், ரெடின் கிங்ஸ்லி மீது எப்போது காதல் வந்தது என்பதை மனம் திறந்து கூறியுள்ளார். அதாவது, பலருக்கு பல விதமாக லவ் ஸ்பார்க் வரும், ஆனால், எனக்கு என் அப்பா இறந்த போது தான், அவர் மேல அந்த காதல் ஸ்பார்க் வந்துச்சு. என் அப்பா இறந்த போது அவர் ஊரில் இல்லை. இதனால், அவரால் இறுதி சடங்கிற்கு வரமுடியாமல் போது. இதனால், அவர் ஊருக்கு வந்ததும், இரண்டு, மூன்று நாள் கழித்து வீட்டிற்கு வந்து என்னை பார்த்து ஆறுதல் கூறினார்.

அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் அனைவரும் சோகத்தில் இருந்தார்கள். ஆனால், இந்த மனுஷன் வீட்டிற்கு வந்த 5 நிமிஷத்தில் அனைவரையும் கலகலப்பாக மாற்றிவிட்டார்கள். அனைவரும் மனதில் இருக்கும் கவலையை அந்த நேரம் மறந்துவிட்டார்கள். அப்போது தான் என் மனதிற்குள் அந்த லவ் ஸ்பார்க் வந்ததை நான் உணர்ந்தேன். என் அப்பாவும் இவர் மாதிரி தான் எப்போதும், கலகலப்பா, பாசிட்டிவா இருப்பாரு. அந்த நேரத்தில் தான் இவர் வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்கும் என மனசு சொல்லுச்சு, அது தான் அவர் மேல் எனக்கு காதல் வந்த தருணம் என சங்கீதா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X