விஜய்க்கும் எனக்கும் கல்யாணம்னு எங்க காலேஜ்ல நினைச்சிட்டாங்க.. பூவே உனக்காக சங்கீதா ஓபன் டாக்!

சென்னை: கேரளாவின் மலப்புரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சங்கீதா விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் என்கிற செய்தி வந்ததும் நடிகை சங்கீதாவின் கல்லூரியில் இருந்தவர்களே தப்பாக நினைத்து விட்டார்கள் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சங்கீதா வெளிப்படையாக பேசியுள்ளார்.

1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சினேகிக்கன் ஒரு பெண்ணு படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சங்கீதா தமிழில் பாக்யராஜ் நடிப்பில் வெளியான என் ரத்தத்தின் ரத்தமே படத்தின் மூலம் 1989ம் ஆண்டு கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

Actress Sangeetha talks about When my College professor misunderstood me and Vijay going to marry
Photo Credit:

இதய வாசல், நாட்டுக்கு ஒரு நல்லவன், சாமுண்டி, தாலாட்டு, கேப்டன் மகள், மகாநதி, ராவணன், எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான அவர், 1996ம் ஆண்டு விஜய்யுடன் இணைந்து பூவே உனக்காக படத்தில் நடித்தார்.

விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி: அப்பா இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜயகாந்த், ரஜினிகாந்த் படங்களில் நடித்து வந்த விஜய் ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் நடித்தார். தொடர்ந்து அப்பா சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. விக்ரமன் இயக்கத்தில் சங்கீதாவுடன் இணைந்து நடித்த பூவே உனக்காக படம் விஜய்க்கு முதல் பிளாக்பஸ்டர் படமாக மாறியது. இன்று 250 கோடி சம்பளம், அரசியல் என அவர் வளர்ந்து நிற்க காரணமே அந்த பூவே உனக்காக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தான் என்று சொன்னாலும் அது மிகையல்ல.

Actress Sangeetha talks about When my College professor misunderstood me and Vijay going to marry

சங்கீதாவுடன் திருமணம்: பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் என விஜய் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களாக கொடுத்து பிரபலமாகி வந்த நிலையில், அவரை அவரது ரசிகையான சங்கீதா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் ஆனது.

எனக்கும் விஜய்க்கும் கல்யாணம்னு நினைச்சிட்டாங்க: பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சங்கீதா சமீபத்தில், அளித்த பேட்டியில், படங்களில் நடித்துக் கொண்டே கல்லூரியிலும் படித்து வந்தேன். விஜய்க்கு சங்கீதாவுடன் திருமணம் என்கிற தகவல்கள் வெளியான நிலையில், என்னுடைய கல்லூரி பேராசிரியர் ஒருவர், என்னம்மா உனக்கும் விஜய்க்கும் கல்யாணமாமே எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்லை என்றார். அதைக்கேட்டு நான் அப்படியே சிரித்துவிட்டேன். அய்யோ அது வேற சங்கீதா சார், அது நானல்ல என்று கூறினேன். எனக்கும் அப்போது திருமணம் ஆகாததால் பலரும் பூவே உனக்காக சங்கீதாவை விஜய் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றே நினைத்து விட்டனர் என அவள் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

அடுத்த வருஷமே திருமணம்: பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை 2000ம் ஆண்டே நடிகை சங்கீதா திருமணம் செய்துக் கொண்டார். 2002ம் ஆண்டு சாய் தேஜஸ்வதி என்கிற பெண் குழந்தை இந்த தம்பதியினருக்கு பிறந்தார். சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை சரவணன் இயக்கும் போது அவருக்கு உதவியாக சங்கீதா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டு வெளியான கண் திறந்து பாரம்மா படத்துக்குப் பிறகு தமிழில் நடிப்பதை நிறுத்திய சங்கீதா, பல வருடங்கள் கழித்து பரத் நடித்து வரும் காளிதாஸ் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X