“Periods“ தலைகீழா தொங்கினேன்.. எதிரில் செல்வராகவன்.. அலறிய நடிகை சசி லயா!

சென்னை : இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான நடிகை சசி லயா, மீனாட்சி பொண்ணுங்க, இதயம் போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் பகாசூரன், ஒயுட் ரோஸ், மதராஸ் மாஃபியா கம்பெனி,கிப்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பகாசூரன் திரைப்படத்தில் சுந்தரி என்ற ரோலில் மோசமான வில்லியாக நடித்தது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில், பகாசூரன் திரைப்படத்தில் நான் மூன்று வருடத்திற்கு முன் நடித்தேன், இயக்குனர் மோகன் ஜி இந்த படத்தினுடைய கதையை என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டுவிட்டு நான் வில்லியாக நடிக்க தயார். ஆனால், இவ்வளவு மோசமான வில்லியாக நடிப்பதில் எனக்கு முரண்பாடு இருந்தது. ஏனென்றால், இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு வார்டன் ஒரு பெண்ணிடம் இப்படித்தான் நடந்து கொண்டார். அதைத்தான் மோகன் ஜி அவர்கள் பகாசூரன் படத்தில் சொல்லியிருந்தார். ஆனால், இவ்வளவு மோசமான கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன்.

Sasi Laya bakasuran interview
Photo Credit:

ரொம்ப கஷ்டப்பட்டேன்: மோகன் ஜி தொடர்ந்து எனக்கு ஒரு வாரம் ஃபோன் செய்து கொண்டே இருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால், தான் சரியாக இருக்கும் என தொடர்ந்து என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.மேலும், இந்த படத்தை பார்க்கும் பலருக்கு இது ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக இருக்கும் என்று சொன்னதால், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க ஒத்துக்கொண்டு அந்த திரைப்படத்தில் நடித்தேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் செல்வராகவன் என்னுடைய கழுத்தை அறுப்பதற்காக எதிரில் கத்தியோடு நின்று கொண்டு இருப்பார். நான் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருப்பேன். ரிஹர்சலில் என்னை நேராக கட்டி தொடங்கிவிட்டு, பின் இறங்கிவிட்டார்கள் நானும் அப்படித்தான் காட்சியில் இருக்கும் என நினைத்தேன்.

அன்னைக்கு Periods: ஆனால், டேங்கில் என்னை தலைகீழாக கட்டி தொடங்கவிட்டார்கள், என்னால், எதுவுமே சொல்லமுடியவில்லை. கிட்டத்தட்ட 18 முறை என்னை கயிற்றில் கட்டி ஏத்தி ஏத்தி இறக்கினார்கள். அந்த காட்சியை எடுத்து 5 மணி நேரம் எடுத்தார்கள். அந்த நாள் எனக்கு 'Periods' என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த காட்சி எடுத்து முடிப்பதற்குள் கழுத்து, முதுகு எல்லாம் பயங்கரமான வலி, அந்த வலி சரியாவதற்கு ஒரு மாதமானது. உண்மையில் அந்த காட்சிக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போது அதுபோல ஒரு காட்சியில் நடிக்க சொன்னால் நிச்சயமாக நடிக்க மாட்டேன் என சசி லயா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X