வரியா.. இல்லயா? படப்பிடிப்பில் தகராறு செய்த கணவர்.. அம்போனு விட்டுட்டு போயிட்டாரு.. பதறிய நடிகை!
சென்னை: சீரியல் , சினிமா என அனைத்திலும் கலங்கி வரும் நடிகை தான் செந்தில் குமாரி. இயக்குநர் பாண்டிராஜின் பசங்க படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், மதுரையை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருந்த நிலையில், இவரின் தங்கை நடிகை மீனாள் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, அம்மா, அண்ணி, மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நான் சினிமாவில் நடிக்க வரும் போதே என்னுடைய கணவர், அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும். எந்த நடிகருடனும் நெருக்கமாகவோ கையை பிடித்துக் கொண்டு, காலை பிடித்துக் கொண்டோ நடிப்பதாக இருந்தால், நீ சினிமாவில் நடிக்கவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நான் அதற்கு ஓகே என்று சொல்லிவிட்டு தான், சினிமாவில் நடிக்க வந்தேன். தொடர்ந்து, அதுபோன்ற கதாபாத்திரத்தில் தான், நான் நடித்துக் கொண்டு இருந்தேன் ஆனால், திட்டக்குடி என்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில், கட்டில் சீன் வந்தது. ஆனால், ஒருவர் ஒருவர் தொடுவது போல இருக்காது. அவர் அங்கே படுத்திருப்பார், நான் இங்கே படுத்திருப்பேன் முகம் மட்டும் தான் தெரியும். படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கிறது என்று இயக்குனர் என்னிடம் சொல்லவே இல்லை.

நடிகை செந்தில் குமாரி: படப்பிடிப்பு நடக்கும் போது தான் அந்த காட்சியை என்னிடம் சொன்னார்கள் நானும் வேறு வழியே இல்லாமல் நடிக்க ஒத்துக்கொண்டேன். என்னுடைய கணவர் எப்போதுமே படப்பிடிப்புக்கு என்னுடன் வருவதால் அந்த காட்சியை பார்த்துவிட்டு அதில் நடிக்க கூடாது என்று பெரிய பிரச்சினை செய்து விட்டார். இப்போ, நீ வரியா... இல்லையா.. என்று என்னிடம் கேள்வி மேல் கேட்க ஆரம்பித்துவிட்டார். நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கடைசியில் பணத்தை போட்டு படத்தை எடுக்கிறார்கள். இதனால், பாதியிலேயே வர முடியாது, நான் நடித்துவிட்டு தான் வருவேன் என்று சொல்லிவிட்டேன். அத்தனை பேர் முன்னிலையில் நான் அவ்வாறு சொன்னதால் வேறு வழியே இல்லாமல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்று விட்டார். நான் அந்த சீனில் நடித்து முடித்து விட்டு திரும்பி வருவதற்குள், 100 சிகரெட்களை பிடித்திருந்தார். அப்போதும், வா வீட்டுக்கு போகலாம் என அழைத்தார். நான் இரண்டு நாள் படப்பிடிப்பு இருக்கிறது முடித்துவிட்டு போகலாம் என்று சொன்னேன். அது அவருக்கு பிடிக்காததால், படப்பிடிப்பு தளத்தில் என்னை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
பதறிய நடிகை: பின் நானே தனியாக ஓட்டலுக்கு வந்துவிட்டேன். ஆனால், அறையில் அவர் இல்லை. அப்போது, அறைக்கு போன் வந்தது. அதில், உங்க கணவர் சண்டை போட்டதால், உடனே இந்த அறையை காலி செய்ய வேண்டும் என்று சொல்விட்டு ஃபோனை வைத்துவிட்டார்கள். உடனே நான் பதறிப்போய், இயக்குனருக்கு ஃபோன் போட்டு, என் கணவர் சண்டை போட்டதால், அறையை காலி செய்ய சொல்கிறார்கள் சார் என்று சொன்னோன். உடனே இயக்குநர் யாரும் அப்படி சொல்லி இருக்க மாட்டார்கள் என்று சொன்னார். அதன் பின்புதான், பேசியது என் கணவர் என்பது தெரிந்தது. இதையடுத்து, இயக்குநர் இன்னும் சில நடிகர்கள் அவரிடம் பேசி சமாதானப்படுத்தினார்கள். அன்றிலிருந்து என் கணவர், என்னுடைய படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டார். ஏனென்றால், ஏடாகூடமான ஏதாவது ஒரு காட்சி வந்து விட்டால் அதனால் குடும்பத்தில் பிரச்சனையாகிவிடும் என்று அவர் நினைக்கிறார் என்று நடிகை செந்தில் குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











