Shakeela: நான் திறந்த புத்தகம்.. ஒளிவு மறைவே இல்ல.. ஓபனாக பேசிய நடிகை ஷகிலா!

சென்னை: 90களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. அக்கால கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை விட இவரது படங்கள் வசூலை அள்ளியது. ஆபாச படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை ஷகிலா, தற்போது குணசித்திர கதாபாத்திரம், நகைச்சுவை கதாபாத்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர் மனம் திறந்து பல விஷயத்தை கூறியுள்ளார்.

கேள்வி :அரசியலுக்கு வருவீங்களா?
பதில்: நான் அரசியலுக்கு வர வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கிறது. ஏழை மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன். நான் ஒரு சிங்கிள் பர்சன் நான் எனக்காக எதையும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன். என்னிடம் பணம் இருந்தால் நிச்சயம் நிறைய உதவிகளை செய்வேன். எந்த கட்சிக்கு போவது என்று தெரியவில்லை பல கட்சிகளில் இருந்தது என்னை கூப்பிடுகிறார்கள். இருந்தாலும் எனக்கு பயம் இருக்கிறது.

shakeela interview

கேள்வி : உங்களின் கிரஷ் யாரு?
பதில்: எனக்கு சூர்யா மீது கிரஷ் இருக்கிறது. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமலஹாசன் தான். அது என் வாழ்க்கையில் என்றைக்குமே மாறவே மாறாது. இருந்தாலும் எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும்.

கேள்வி : எங்கள் யாருக்குமே தெரியா ஷகிலாவின் மறுபக்கம் என்ன?
பதில்: நான் ஒரு திறந்த புத்தகம் என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் போது, என்னை பற்றி அனைவருக்கும், எல்லா விஷயமும் நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும் போது யாருக்குமே தெரியாத விஷயத்தை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வேண்டும்.

shakeela interview

கேள்வி : நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா?
பதில்: என்னுடைய காதல் கதையை பற்றி கேட்க யாருக்குமே தகுதி கிடையாது. நீங்கள் அனைவரும் ஒன்று இரண்டு காதல் தான் செய்து இருப்பீர்கள். எனக்கு விரல் விட்டு எண்ணிவிட முடியாத அளவிற்கு காதல் இருக்கிறேன். அதை எல்லாம் இப்போது கணக்கு பார்க்க எனக்கு நேரமில்லை. நான் யாரையெல்லாம் காதலித்தேனோ அவர்கள் அனைவரையும் மனதார காதலித்தேன். இப்போது கூட நான் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு கல்யாணமாகப்போகிறது. அவரிடம் நிச்சயமாக உங்கள் திருமணத்திற்கு என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

shakeela interview

கேள்வி : உங்கள் பயோபிக்கில் வந்த அத்தனை விஷயங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்தவையா?
பதில்: என் பயோபிக்கில் வந்த எதுமே என் வாழ்க்கையில் நடக்கவே இல்லை. என் பயோபிக் புத்தகத்தை அப்படியே அவர்களிடம் விற்றுவிட்டேன். அந்த புத்தகத்தில் இருந்த பாதி கதையை எடுத்து இருந்தால் கூட படம் வெற்றி பெற்று இருக்கும். சினிமா எத்திக்ஸ் என்று சொல்லிவிட்டு படத்தின் மொத்தத்தையும் மாற்றிவிட்டார்கள். இதில் உண்மைத்தன்மை இல்லாததால், நான் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தாலும், படம் ஊத்திக்கும் என்று சொன்னோன் அதே மாதிரி ஆகிவிட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய ஷகிலா, நான் மனிதர்களைப் பார்த்து பயப்படவே மாட்டேன், அல்லா ஒருவர் மீது தான் எனக்கு பயம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருப்பதால், நான் எப்போதும் பொய் பேசவே மாட்டேன், எந்த விஷயத்திலும் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று நடிகை ஷகிலா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X