இளையராஜாவுக்கு வேலை வெட்டி இல்ல.. வழக்கு போட்டு மரியாதையை கெடுத்துக்கிறார்.. ஷகிலா அதிரடி பேட்டி!

சென்னை: நடிகை ஷகிலா அண்மையில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வனிதா விஜயகுமார் இயக்கி, நடிக்க, அவரின் மகள் ஜோவிகா இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அனுமதியின்றிபாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டு இருப்பது குறித்து ஷகிலா பேசி உள்ளார்.

இதில், இளையராஜா அவர்களுக்கு இப்போது வேலை வெட்டி இல்லை, எத்தனை படங்களுக்கு இசை அமைக்கிறார் என்று தெரியவில்லை. உண்மையில், இந்த விஷயத்தை கேட்டு எனக்கு கோவம் தான் வருகிறது. அது அவர் இசையமைத்த பாடல் தான். நான் குழந்தையாக இருந்ததில் இருந்தே அவரின் பாடலை கேட்டு வளர்ந்து இருக்கிறேன். இளையராஜா சார், லிவ்விங் லெஜண்டாக இருக்கிறார். அவரை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இவரை மக்கள் மிகப்பெரிய உயரத்தில் வைத்து இருக்கிறார்கள். ஆனால், அவர், பாட்டை பயன்படுத்துவதால் வழக்கு போடுவது சரியில்லை. அவர் ஒரு படத்திற்கு இசையமைத்துவிட்டு, அதற்கான பணத்தை வாங்கிவிட்டார். அப்படி என்றால், அது தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் சொந்தம். அவர் எப்படி அந்த பாட்டு என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும்.

Mrs amp amp Mr Vanitha shakeela amp amp
Photo Credit:

வேலை வெட்டி இல்லை: சமீப காலமாக அவருக்கு படங்கள் இல்லை, வேலை வெட்டி இல்லை என்பதால், இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறார். யாராவது அவருக்கு வேலை கொடுத்தால், அதில், அவர் கவனத்தை செலுத்தவார். இன்றைய காலத்தில் இருப்பவர்கள் அனைவரும் அவரின் பாடலை கேட்டு வளர்ந்தவர்கள் தான். அவருக்கு என்று தனி மரியாதை இருக்கும் போது, இந்த வயதில் அவரின் மரியாதையை அவரே கெடுத்துக்கொள்கிறார். வனிதா அவரை சந்தித்த போது, இந்த பாடல் பற்றி பேசுவதற்கு யோசிக்கவில்லை. அதன் பிறகு தான், அது பற்றி யோசித்தார். அதற்காக முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை சென்றார். ஆனால், அதற்குள் இளையராஜா வழக்கு போட்டுவிட்டார். அவர் வழக்கு போட்டதால், படத்திற்கு ஒன்னும் பாதகம் ஏற்படவில்லை. இளையராஜாவால் பலர் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள் என ஷகிலா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: vanitha shakeela வனிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X