அந்த சீனுக்காகவே படம் 100நாள் ஓடுச்சு.. மலையாளிகளின் டேஸ்ட் என்ன இப்படி இருக்கு.. ஷகிலா பேட்டி!

சென்னை : மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா, பின்னாளில் மலையாள சினிமாவின் டாப் நடிகை ஆனார்.

1990களில் நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார்

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விட ஷகிலாவின் படங்கள் வசூலை வாரிகுவித்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களிலும் ஷகிலாவிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை ஷகிலா

நடிகை ஷகிலா

கவர்ச்சி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஷகிலா,விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வந்து விதவிதமான சமையல்களை செய்து அசத்தினார். இதுவரை கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்த ஷகிலா மீதான கண்ணெட்டத்தையே அந்த நிகழ்ச்சி மாற்றியது. அதுமட்டுமில்லாமல் குக்வித் கோமாளியில் கலந்து கொண்ட அனைவரும் ஷகிலா அம்மா என அன்போடு அழைத்தனர்.

குக்வித் கோமாளியில்

குக்வித் கோமாளியில்

குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஷகிலா, தொலைக்காட்சிகளில் பிஸியாகவே இருக்கிறார். பிரபலமானவர்களை பேட்டி எடுத்து வருகிறார். அண்மையில் பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுத்த ஷகிலா, அவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு, பயில்வானையே திக்குமுக்காட வைத்துவிட்டார். ஷகிலா பயில்வான் ரங்கநாதனின் பேட்டி இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிராண்டானது.

குளிக்கிற சீன்

குளிக்கிற சீன்

இந்நிலையில்,பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷகிலா, நான் நடிச்ச கின்னர தும்பிகள் திரைப்படம் தியேட்டரில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடுச்சி, உடனே அந்த சீடியை வாங்கிவிட்டு வந்து வீட்டில் போட்டு பார்த்தேன், ஆனால், அந்த படம் ஏன் 100 நாள் ஓடுச்சினு என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதன்பின், இயக்குநரிடம் போன் பண்ணி கேட்டேன், எனக்கும் அது தெரியவில்லை என்று கூறிவிட்டார்.

ஒரே ஒரு சீனில் நடிக்கமாட்டேன்

ஒரே ஒரு சீனில் நடிக்கமாட்டேன்

அந்த படத்தில் நான் குளிக்கிற சீன் ஒன்று இருக்கிறது, அதைத் தவிர படத்தில் வேறு எதுவுமே இல்லை. அந்த சீனுக்காகவே படம் 100 நாள் ஓடியது என்றால் மலையாளிகளின் டேஸ்ட் என்ன என்று எனக்கு தெரியவில்லை. அந்த படத்திற்கு பிறகு, ஒரே ஒரு சீன்ல நடிச்சாலே படம் 100 நாள் ஓடிவிடும் என்று பல படங்களில் ஒரே ஒரு சீனுக்கு மட்டும் என்னை அழைத்தார்கள். ஆனால், இனி மேல், ஒரே ஒரு சீனுக்காக படத்தில் நடிக்க மாட்டேன்.

நல்ல கதாபாத்திரம்

நல்ல கதாபாத்திரம்

நல்ல கதாபாத்திரம் வந்தால் நிச்சயம் நடிப்பேன், ஆனால், எனக்கு நடிக்க தெரியுமா என்றே பலருக்கு சந்தேகம். எல்லாரும் கவர்ச்சியாத்தான் நடிக்க வரும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கவர்ச்சியாக நடிப்பது அனைவராலும் செய்துவிட முடியாது, கவர்ச்சியா பார்க்க, கவர்ச்சி உதட்டை சுளிக்க பல முறை வீட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டேன் என்று கூறினார். 2003ல் வெளியான ஜெயம் படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த ஷகிலா. அதன்பின்னர் தூள், வாத்தியார், வியாபாரி, அழகிய தமிழ் மகன் உட்பட பல தமிழ்ப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X