Shakeela: அதை ரொம்ப நாளைக்கு பண்ண முடியாது.. அதனால தான் கல்யாணம் பண்ணிக்கல.. நடிகை ஷகிலா ஓபன்!
சென்னை: நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தற்போதும் சினிமா, சின்னத்திரை என பிசியாக செயல்பட்டுவரும் ஷகீலா, யூடியூப் மூலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சிறப்பாக கொடுத்து வருகிறார். இவரது இந்த பேட்டிகள் மிகச்சிறப்பான கவனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
கவர்ச்சியான கேரக்டர்களில் நடித்து அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தாலும் காமெடி, கேரக்டர் ரோல்களிலும் இவர் நடித்துள்ளார். சில ரியாலிட்டி ஷோக்களிலும் இவரை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து ஷகிலா வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ஷகிலா: நடிகை ஷகிலா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காரராக உள்ளார். இந்த மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரை கவர்ச்சியான கேரக்டர்களிலும் காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களிலும் பார்க்க முடிந்தது தற்போது சின்னத்திரையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சில ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையையும் வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் ஷகிலா அம்மா என்று அழைத்தது அனைவரையும் கவனம் கொள்ள செய்தது.
திருமணம் குறித்து ஷகிலா ஓபன்: யூடியூப் மூலம் பிரபலங்கள் பலரை பேட்டியெடுத்து வருகிறார். இவர் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் ஏராளமான சர்ச்சைகளையும் விமர்சனங்களை உண்டு செய்கின்றன. அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகிறார் ஷகிலா அந்த வகையில் தான் திருமணம் செய்துக் கொள்ளாததற்கு காரணத்தை தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். திருமணம் செய்துக் கொண்டு ஒருத்தர் மூஞ்சியையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அதனால்தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய இளைஞர்களிடம் இந்த மனநிலை காணப்படும் நிலையில் ஷகிலாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
ஷகிலா வேதனை: மலையாளத்தில் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷகிலா. ஒரு காலகட்டத்தில் நடிகர் மம்முட்டி, மோகன்லால் படங்களை காட்டிலும் ஷகிலாவின் படங்கள் அதிகமான வசூலை பெற்றுள்ளன. அந்த அளவிற்கு உச்சத்தில் இருந்த ஷகிலாவின் பணத்தை அவரது தங்கை ஏமாற்றிவிட்டதாக பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார். இதனால் தன்னுடைய வாழ்க்கை மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்கியதாகவும் அவர் வேதனையை பகிர்ந்திருந்தார். சினிமா குறித்த பல விஷயங்களை இவர் மிகவும் போல்டாக பேசி வருகிறார். மலையாள படவுலகில் ஹேமா கமிட்டி அறிக்கையையொட்டி பல கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
தமிழிலும் பாலியல் துன்புறுத்தல்: மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக அவர் கூறியிருந்தார். தான் சினிமாவில் நடிக்க வந்தபோது கேரவன்கள் இல்லாத நிலையில், உடை மாற்றக்கூட இடமில்லாமல் மற்றவர்கள் முன்னிலையில் மேலே ஒரு ஆடையை போட்டுகு கொண்டு உடை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார். தற்போது கேரவன்கள் வந்துள்ள நிலையில், அங்கு உடை மாற்றுவது மட்டுமில்லாமல் மற்ற மோசமான விஷயங்களும் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை தான் நேரில் பார்க்கவில்லை என்றபோதிலும் மற்றவர்கள் கூற கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











