ஓடிப்போய் கல்யாணம்.. அக்காவை மொத்தமா ஒதுக்கிட்டாங்க.. சாந்தி பிரியா பேட்டி!

சென்னை: நடிகை பானுப்பிரியா ஆராரோ ஆரிராரோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் உச்ச நடிகையாக இருந்த இவர் பின் வாய்ப்புகள் குறைவுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சினிமாவில் தலைகாட்டுவதே இல்லை.

பானு பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியா, 'செண்பகமே செண்பகமே' பாடல் இடம் பெற்ற 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.அதுமட்டுமில்லாமல், புராண இதிகாச கதையான விஸ்வாமித்ரா படத்தில் சாகுந்தலாவாக நடித்திருந்தார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே சினிமாவில் பிஸியாக இருந்த சாந்தி பிரியா, திருமணம் செய்து கொண்டு பின் சினிமாவைவிட்டு விலகினார். தற்போது, தற்போது, இவர் 'பேட் கேர்ள்' என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அண்மையில் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள இவர் பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

Bhanupriya Shanthi Priya interview

நடிகை சாந்தி பிரியா: நான் காதலித்து ஓடிப்போய் தான் திருமணம் செய்து கொண்டது, என் அம்மாவிற்கு விருப்பம் இல்லை இருந்தாலும் என் காதலை என் அம்மா ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எதிர்த்ததற்கு காரணம் கூட, பாலிவுட்டில் இப்போதுதான் பிஸியாக நடித்துக்கொண்டு கொண்டிருக்கிறாய், இந்த நேரத்தில் திருமணம் தேவையா? என்று தான் கேட்டார்கள். ஆனால், அந்த நேரத்தில் காதல் என் கண்ணை மறைத்து விட்டது, நான் திருமணம் செய்து கொண்டேன். அம்மாவும் திருமணம் செய்து கொண்டால் குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்வார். அது தான் எனக்கும் சரி என்று பட்டது. இதனால், திருமணத்திற்கு பிறகு குடும்பம் தான் முக்கியம் என்று எனக்குத் தோன்றியது. இதனால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகி, குழந்தைகள் மற்றும் கணவரை கவனித்துக் கொண்டேன்.

டப்பிங் பேசினாங்க: 2004ம் ஆண்டு என் கணவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். அவர் மறைந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், இப்பொழுதும் நான் அவருடைய நினைவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தான் தற்போது 'பேட் கேர்ள்' படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படத்திற்கு கூட என்னுடைய அக்கா பானுப்பிரியா தான், எனக்காக டப்பிங் பேசினார். ஏனென்றால், அந்த படத்தில் பிராமின் ஸ்லாங் வரவேண்டும் அது எனக்கு சரியாக வராததால் அக்கா எனக்காக பேசினார். ஆனால், அக்காவுடைய உருவத்திற்கும், என் உருவத்திற்கும் அந்த வாய்ஸ் செட்டாகாததால் இயக்குனர் வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார்.

Bhanupriya Shanthi Priya interview

ஒதுக்கிட்டாங்க: அக்கா இப்பவும் அதே போலத்தான் இருக்கிறார். ஆனால், அக்காவை பற்றி தேவையில்லாத வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. சினிமாவில் நானும் அக்காவும் நுழைந்ததிலிருந்து சர்ச்சைகள் குறித்தும், எங்கள் குடும்பம் சம்மந்தமாக சிலர் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அக்கா பானுபிரியா, 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த ஓர் அழகான நடிகை. ஆனால், 80ஸ் நடிகர்களின் ரீயூனியன் நடந்தது. அதில் பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள். அப்பக்கூட யாருமே அக்காவை கூப்பிடவே இல்ல, மொத்தமா அவங்க எங்க அக்காவை ஒதுக்கிட்டாங்க. இது குறித்து யாரிடமும் பேசவே கூடாது என்று அண்ணே சொல்லிட்டாரு, இருந்தாலும் யார் என்கிட்ட அக்காவை பத்தி கேட்கும் போது எல்லாம், நான் இந்த விஷயத்தை சொல்லிக்கிட்டேத்தான் இருக்கேன் என்று நடிகை சாந்தினி பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X