ஆண் வாரிசு இல்லையேனு ரஜினி எடுத்த முயற்சி.. இப்படி எல்லாம் நடந்திருக்கா? உண்மையைப் பகிர்ந்த நடிகை
சென்னை: நடிகை சாந்தி வில்லியம்ஸ், வெள்ளித்திரை தொடங்கி, சின்னத்திரை வரை தனது நடிப்பால் பலரது கவனத்தை பெற்றவர். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தே புகழ் பெற்றவர் இவர். இவரது கணவர் மறைந்த மலையாள இயக்குநர், தயாரிப்பாளர் வில்லியம்ஸ். நடிகை சாந்தி வில்லியம்ஸ் அளித்த பேட்டியில் தனது மகனை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தத்து கேட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, நடிகை சாந்தி வில்லியம்ஸின் கணவரான வில்லியம்ஸ் தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது திரை வாழ்க்கையை மலையாள திரையுலகில் இருந்து தொடங்கி இருந்தாலும், தமிழ் தென்னிந்திய சினிமா முழுவதும் நன்கு அறியப்பட்டவர். அதேபோல் தான் நடிகை சாந்தி வில்லியம்ஸும். வில்லியம்ஸை தான் விருப்பம் இல்லாமல் தான் திருமணம் செய்து கொண்டதாக, சாந்தி வில்லியம்ஸ் பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகனைத் தத்து கேட்டது தொடர்பாக பேசி உள்ளார். அதாவது, தனது கணவர் வில்லியம்ஸை ஒரு முறை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்த போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்களது மகனைத் தத்து கேட்டுள்ளார்.

மகனை தத்து கேட்ட ரஜினி: அதாவது, வில்லியம்ஸ் உனக்குத்தான் நான்கு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா, எனக்கு இரண்டுமே பெண் குழந்தைகள், எனக்கு ஆண் வாரிசு இல்லை, உனது ஒரு ஆண் குழந்தையை எனக்கு தத்து கொடுத்து விடு என்று கேட்டுள்ளார். அதற்கு எனது கணவர் வில்லியம்ஸோ, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், நான் எனது மகனைக் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் குடும்பம்: நடிகை சாந்தி வில்லியம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே திரைத்துறையில் தான் இருக்கிறார்கள். இதில் முதல் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கும் வீர் ரஜினிகாந்த் என்ற மகன் உள்ளார். ஒரு ஆண் குழந்தை தத்து கேட்ட சூப்பர் ஸ்டாருக்கு தற்போது மூன்று பேரன்கள் உள்ளனர்.



Click it and Unblock the Notifications











