வனிதாவை பார்த்ததும் சைலண்ட்.. இளையராஜாவின் உண்மை முகம் இதுதான்..சர்மிளா பேட்டி!
சென்னை: மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை அவரின் மகள் ஜோவிகா தயாரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். மேலும், ராபர்ட், ஷகிலா, பாத்திமா பாபு, ஸ்ரீமான், கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டு இருப்பது குறித்து சார்மிளா puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
வனிதாவை பொருத்தவரையில் இளையராஜாவின் குடும்பம் அவளுக்கு பல வருடமாக தெரியும். எப்போதுமே வனிதா இளையராஜாவை அப்பா என்று தான் அழைப்பார். வனிதா படம் எடுக்க போவதாக ஆசீர்வாதம் கேட்டு தான் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, நிச்சயமாக என்னுடைய படத்தில் உங்களுடைய பாடலை பயன்படுத்துவேன் என்று சொல்லியிருப்பார். அப்போதே, பிடிக்கவில்லை என்றால் வேண்டாமா... இதில், இவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று தன்மையாக பேசி, அவளுக்கு புரிய வைத்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு படம் வெளியாகும் போது, அவசர அவசரமாக ஒரு வழக்கு போட்டு இருக்கிறார்.

ஏன் வழக்கு போடவேண்டும்: இளையராஜா அவர்கள் 'குட் பேட் அக்லி' இன்னும் சில திரைப்படங்களுக்கு காப்பி ரைட் தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஆனால், அது வேறு விஷயம் வனிதா விஜயகுமார் இளையராஜா பொருத்தவரை, அப்பா மகளாகத்தான் அவர் நினைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவசரமாக ஏன் வழக்கு போட வேண்டும் அதை ஃபோனிலேயே சொல்லி இருக்கலாம். இல்ல தனிப்பட்ட முறைகள் அழைத்து பேசி இருக்கலாம். இளையராஜாவை சினிமாவே வேறுமாதிரி பார்க்கிறது. அவர் யாரிடத்திலும் பெருந்தன்மையோடு இல்லை. நயன்தாரா, தனுஷ் விவகாரத்தில் வழக்கு போட்ட தனுஷ், விஜே சித்து படத்திற்கு தனது படத்தின் பாடலை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறார். இதுபோலத்தான் இளையராஜா தனக்கும் அனுமதி தருவார் என வனிதா நினைத்துவிட்டார்.
இளையராஜா இப்படி செய்யலாமா: வனிதா விஜயகுமார் பெரிய நடிகருடைய மகளாக இருந்தாலும் சாதாரண ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கையில் இருக்கும் பணத்தை வைத்து அதேபோல தன்னுடைய மகள் ஜோவிகா பிக்பாஸில் சம்பாதித்த பணத்தை வைத்து தான் இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் தான் அவர்களுக்கு வாழ்க்கையே. அப்படி இருக்கும்போது, வளர்ந்து வரும் சிறிய பெண்ணான ஜோவிகா உடன் இளையராஜா மோதலாமா... அவர் மோதுவது வனிதாவுடன் இல்லை அவளுடைய மகள் ஜோவிகாவுடன் தான்.
பயப்படுகிறார்கள்: அந்தப் பாடலை சோனி மியூசிக்கிடமிருந்து வனிதா வாங்கி இருக்கிறார். அதை சோனி மியூசிக் நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டது. இப்பொழுது இந்த படத்தின் சோனி மியூசிக்கும் ஒரு பார்ட்னராக மாறிவிட்டார்கள். இப்போது பிரச்சனையே முடிந்துவிட்டது. இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைத்து அதை தயாரிப்பாளரிடம் அதற்கான சம்பளத்தை வாங்கிய பிறகு அதற்கு எப்படி தற்போது அவர் உரிமை கொண்டாட முடியும். இனி வரும் காலத்தில் அவரின் பாடலை யாரும் பயன்படத்தாவே மாட்டார்கள். பணம் போட்டு படத்தை எடுத்து விட்டு இவரை ஏன் நினைவு படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். இனிமேல் எந்த தயாரிப்பாளரும் இவர் பாட்டை பயன்படுத்த மாட்டார்கள் என்று சார்மிளா பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











