‘புதுப்பேட்டை‘ படத்தில் அந்த சீன்.. கேரவனில் பயங்கரமா அழுதேன்.. மனம் திறந்த சினேகா!

சென்னை: தனுஷின் நடிப்பில் எத்தனை பிளாக்பஸ்டர் படங்கள் வந்திருந்தாலும், 'புதுப்பேட்டை' படத்திற்கு ஈடாகாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் திரைப்படத்தில் 'கொக்கி குமார்' என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வெளிப்படுத்திய அசால்ட்டான நடிப்பு, இன்று வரை தமிழ் சினிமா உலகிற்கு ஒரு பாடம். 'புதுப்பேட்டை 2' எப்போது வரும் என்று இப்போதும் இணையவாசிகள் இயக்குநர் செல்வராகவனை நச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்த இந்தப் படத்தில், 'புன்னகை அரசி' சினேகா தன் வழக்கமான குடும்பப் பாங்கான இமேஜை உடைத்து, 'கிருஷ்ணவேணி' என்ற விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் எழுந்தாலும், சினேகாவின் திரை வாழ்க்கையில் டாப் 5 படங்களை எடுத்தால் அதில் புதுப்பேட்டை படம் இருக்கும்.

Dhanush Pudhupettai Sneha
Photo Credit:

நிஜமாகவே உதைத்துவிட்டார்: யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ள சினேகா, அந்தப் படத்தின் மறக்க முடியாத, நெஞ்சை உலுக்கிய ஒரு காட்சி குறித்துப் பேசியுள்ளார்: புதுப்பேட்டை படத்தில் நடிகர் பாலசிங்கம் அன்பு கேரக்டரில் நடித்திருப்பார். அவர் ஒரு காட்சியில் என் வயிற்றில் எட்டி உதைப்பது போல இருக்கும். அந்த சீனில் உண்மையிலேயே அவர் என் வயிற்றில் எட்டி உதைத்துவிட்டார். இயக்குநர் செல்வா சார், எக்ஸ்பிரஷன் இன்னும் பயங்கரமா வேணும், இன்னும் வேணும் எனக் கேட்டுக்கொண்டே இருந்ததால், பாலசிங்கத்திற்கு என்னை அடிப்பதிலும் உதைப்பதிலும் ஒரு கண்ட்ரோல் இல்லாமல் போய்விட்டது. படம் இன்னும் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மிதித்துவிட்டார்.

Dhanush Pudhupettai Sneha
Photo Credit:

கதறி அழுதேன்: அந்த சீன் ஓகே ஆனதும், சார் நான் கேரவனுக்குப் போறேன் என சொல்லிவிட்டு உள்ளே போய் வலி தாங்க முடியாமல் பயங்கரமா அழுதுட்டேன். இதைப் பார்த்துட்டு யாரோ செல்வா சார்கிட்ட சொல்லியிருக்காங்க. கேரவனுக்கு வந்த செல்வா சார், நிஜமாவே உதைச்சிட்டாரா? ரொம்ப வலிக்குதா? சாரி... ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அப்படின்னு சொன்னாரு. ஆனா, அந்தப் படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது உண்மையிலேயே பிரம்மிப்பா இருந்தது. நான் அன்னைக்கு வலி தாங்காமல் அழுத அழுகைக்குப் பெரிய பலன் கிடைத்தது போல இருந்தது என்று சினேகா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். புதுப்பேட்டை படத்தில் முதன்முறை 'சூப்பர் 35' கேமரா ஃபார்மட்டில் எடுக்கப்பட்டதால், படத்தின் கலர் டோன் , விஷுவல்கள் ஹாலிவுட் தரத்தில் கிரிஸ்ப்பாக இருந்தன. யுவனிக் பாடல்களும், பின்னணி இசையும் தான் படத்தின் முதுகெலும்பாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X