நான் என்ன பாவம் பண்ணேன்.. காதலித்து ஏமாந்தேன்.. நடிகை சோனா கண்ணீர் பேட்டி!

சென்னை: பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை சோனா, ஷாஜஹான், ஆயுதம், வில்லன் போன்ற படங்களில் குணசித்திர நடிகையாக நடித்து வந்தார். ஆனால், படவாய்ப்பு சரியாக வராததால் கவர்ச்சி நடிகையாக மாறி மிருகம், ஒன்பதுல குரு, குரு என் ஆளு என பல படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். தற்போது இவர், எஸ்எஸ் மியூசிக் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய காதல் வாழ்க்கை, மன உளைச்சல் என பல விஷயங்களை கண்ணீர் மல்க பேசி உள்ளார்.

நடிகை சோனா: நான் ஒரு விஷயத்தை இன்னும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஏமாற்றுபவர்கள், பெண்களை பயன்படுத்துபவர்கள், மோசமான மனிதர்கள் எல்லாரும் நல்லா சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், என்னை போன்ற மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி உடைந்து போகணும்? நான் ஒன்னும் சாமியார் இல்ல. என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்கிறேன். என்னைச் சுற்றியிருக்கிறவர்கள் என்னை போல கஷ்டப்படக்கூடாது என்று நினைப்பேன். ஆனால், கடைசியில் நான்தான் நிதி ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களிடம் ஏமாந்து உடைந்து போவேன். நான் மட்டும் என்ன பாவம் செய்தேன் என்று கண்ணீருடன் பேசி உள்ளார்.

Sona interview
Photo Credit:

காதலித்து ஏமாந்தேன்: தொடர்ந்து காதல் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய சோனா, நான் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்தேன். ஆனால், அந்த காதலில் நான் என்னையே மதிக்கவில்லை. என்னையே நான் காதலிக்கவில்லை. நான் ஒரு கிளாமர் ஆர்டிஸ்ட் என்பதால் என்னை யாராவது காதலிப்பார்களா... இவருக்கு எவ்வளவு பெரிய மனசு, என்னை ஏற்றுக்கொண்டார் என நினைத்து அவருக்காக பல விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு எல்லாமே கட்டுப்பாடாக மாறிவிட்டது. நான் எழுந்திருப்பது, உட்காருவது, என்ன சாப்பிட வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என எல்லாமே அவர் விருப்பப்படிதான் நடந்தது.

கண்ணீர் பேட்டி: கொஞ்ச நாள் கழித்து உடல் ரீதியான துன்புறுத்தலாக மாறியது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் விரும்பியபடி நடக்காததால் அடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகுதான் அந்த உறவில் இருந்து நான் வெளியே வந்தேன் என நடிகை சோனா கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X