Sona: சினிமால படுத்துkகூட சம்பாதிக்கலாமா? ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. நடிகை சோனா பேட்டி!
சென்னை: பூவெல்லாம் உன் வாசம் படம் மூலம் சினிமாவில் நடிகையாக சோனா அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் SS Music யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமாவில் அனுபவித்த வலிகளை மனம் விட்டு பேசி உள்ளார்.
அதில், பேசிய சேனா, நான் சினிமாவிற்கு வந்த புதிதில் என்ன செய்வது, எப்படி நடிப்பது, எப்படி வாய்ப்பை தேடுவது, காஸ்டிங் கவுச் பிரச்சனை எப்படி எதிர்கொள்வது என எதுவுமே தெரியவில்லை. இரண்டு நாள் ஷூட்டிங் போவேன, அதுக்குள் ஏதாவது பிரச்சனை வரும், உடனே அய்யா என்னை விட்டுவிடுங்கள் என காலில் விழுந்து அங்கிருந்து ஓடிவிடுவேன். பல பிரச்சனைகளை எனக்கு எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.

நடிகை சோனா: அந்த நேரத்தில் தான் எனக்கு குசேலன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு பிரபலமான பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் என்னுடைய புகைப்படம் வந்தது. அதைப்பார்த்து பிரபலமான பத்திரிக்கையில் என்னுடைய போட்டோ வருகிறதே என்பதை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால், அந்த பத்திரிக்கையில் நான் சாய்வாக படுத்து இருக்கும் போட்டோவை போட்டு, அதற்கு கீழே சினிமாவில் படுத்துக்கூட சம்பாதிக்கலாம் என கேப்ஷன் போட்டிருந்தார்கள். அதைப்பார்த்து நான் மிகவும் உடைந்து விட்டேன், இந்த காலகட்டத்தில் அதை எல்லாம் என்னால் எதிர்கொள்ளவே முடியவில்லை. இன்னைக்கு பல பிரச்சனைகளை சந்தித்து ஓரளவுக்கு நான் தெளிவானவளாக மாறி இருக்கிறேன். ஆனால் அந்த காலகட்டத்தில் அதை பார்த்து உடைந்து போனேன்.
ரஜினி கொடுத்த அட்வைஸ்: இதை நினைத்து, குசேலன் படப்பிடிப்பில், நான் யாரிடமும் பேசாமல் மிகவும் சோகமாக இருந்தேன். அப்போது ரஜினி சார், இதை ஏன் நீ தவறாக எடுத்துக்கொள்கிறாய். இதை நீ நல்ல விதமாக எடுத்துக்கொள், நீ சாய்வாக படுத்து இருப்பதே பத்திரிக்கையில் பெரிய செய்தியாக வருகிறது. அப்படி என்றால் நீ எவ்வளவு பிரபலம், அந்த போட்டோவிற்கு எப்படி கேப்ஷன் போடுவது என தெரியாமல், அப்படி போட்டுவிட்டார்களே தவிர, நீ படுப்பது கூட இவ்வளவு முக்கியமான செய்தியாக வருவதை நினைத்து பெருமைப்படு என்றார். அவர் கொடுத்த அந்த அட்வைசுக்கு பிறகு என்னுடைய அணுகுமுறையை மாறிவிட்டது அவர் சொல்வதும் கரெக்ட் தான் என்பது எனக்கு தெரிந்தது என அந்த பேட்டியில் சோனா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











