நானும் செத்துப் போயிருப்பேன்.. ஏகப்பட்ட மனக் குமுறல்களை மனம் திறக்கும் சோனா.. புரமோ வீடியோ!
சென்னை: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக கலக்கிய நடிகை சோனாவின் ஸ்பெஷல் பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாக காத்திருக்கிறது.

பூவெல்லாம் உன் வாசம், ஷாஜகான், குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சோனா.
வடிவேலுவின் மனைவியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது அந்த பேட்டியில் இருந்து ஒரு சில காட்சிகள் புரமோ வீடியோவாக வெளியாகி ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை சோனா சில விஷயங்களுக்காக பர்ஸ்ட் ஆனதாகவும், அப்படி பர்ஸ்ட் ஆகவில்லை என்றால் தனது மனக் குமுறல்களால் தானும் இறந்திருக்கக் கூடும் என தனது வாழ்வின் மர்மமான பக்கங்களில் இந்த பிரத்யேக பேட்டியில் மனம் திறந்துள்ளார் என்பதை இந்த புரமோ வீடியோ வெளிப்படுத்தி இருக்கிறது.
உடனடியாக முழு வீடியோவையும் போடுங்க என ரசிகர்கள் இப்பவே கமெண்ட் பக்கத்தில் கமெண்ட் அடித்து ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











