சரக்கு போதையில் நடந்த பிரச்சனை.. எல்லாமே போச்சு.. அவமானத்தை உடைத்துச் சொன்ன சோனா!
சென்னை: நடிகை சோனா தனது வாழ்க்கையை மையமாக வைத்து 'ஸ்மோக்' என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இரண்டு சீசன்களாக உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களில் 99 சதவீதம் உண்மைகளை மட்டுமே பதிவு செய்துள்ளதாக சோனா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் பல காரணங்களால் இந்த வெப் தொடர் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து பல யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து சோனா பேட்டியளித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது Trend Talks யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப் மற்றும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைபர் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற விஷயம் எனக்கு ஏழு எட்டு மாதங்களுக்கு முன்புதான் தெரிந்தது. அதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இப்படியும் பணம் சம்பாதிக்க முடியுமா என்று நினைத்தேன். அந்த மாதிரி சம்பாதிப்பது இப்போ வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் அது வாழ்க்கையை பாதித்துவிடும். அதற்கு நானே ஒரு உதாரணம்.

நடிகை சோனா: ஒரு காலத்தில் பார்ட்டி, பப், சரக்கு என்று மிகவும் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்தேன். ஆனால், இன்று அனைத்தையும் நான் விட்டு விட்டேன். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்ததால் தான் பல பிரச்சனைகள் வந்தது. அந்த பிரச்சனைகளுக்கு நானே காரணம் என்பதால் அதற்கான பாதிப்புகளையும் அனுபவித்தேன். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவர்கள் கூட, நீ பார்ட்டியில் அப்படித்தான் நடந்து இருப்ப என்று சந்தேகப்பட்டார்கள். அவர்களிடம் நான் அப்படி இல்லை என்று நிரூபிக்க வீடியோவை எடுத்து காட்ட முடியுமா? ஆண்கள் தவறு செய்தாலும் அது பெரிதாக வெளியில் தெரியாது. ஆனால் பெண்கள் செய்யும் ஒரு தவறை இந்த சமூகம் பெரிதாக பேசும். அதனால்தான் இன்று நான் கல்யாணம் ஆகாமல் தனியாக இருக்கிறேன்.
அவமானங்கள்: இப்போது சப்ஸ்கிரைப் மூலம் பணம் வரலாம், எல்லாமே நன்றாக இருக்கலாம். ஆனால் பத்து வருடங்களுக்கு பிறகு திருமணம் போன்ற விஷயங்களில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. இன்று நான் எப்படி சில விஷயங்களை நினைத்து வருந்துகிறேனோ, அதுபோல பின்னாளில் அவர்களும் வருந்த வேண்டிய சூழ்நிலை வரக்கூடும். அதனால் எதை செய்தாலும் யோசித்து செய்யுங்க, நான் இளமையாக இருந்த போது திமிரு, தெனாவட்டு, ஈகோ எல்லாம் இருந்தது. ஆனால், வாழ்க்கை எனக்கு ஒவ்வொரு பாடமாக கற்றுக்கொடுத்தது. அந்த அவமானத்தால் எல்லாத்தைவிட்டு விட்டு தனியாக உங்காந்து இருக்கேன் என சோனா அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications