Sona: அதுக்கு யாரும் கட்டாயப்படுத்தல.. என் உடம்பு தான் மைனஸ்.. மனம் உடைந்து பேசிய சோனா!

சென்னை: கவர்ச்சி நடிகையாக சோனா, குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் தான் கவர்ச்சியாக மாறியது குறித்து பேசி உள்ளார்.

இதில், நான் கவர்ச்சி நடிகையாக மாறியதே ஒரு விபத்தால் தான் நடந்தது. அதை நான் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறேன். குடும்பத்தில் இருந்த வறுமை காரணமாக தான் கவர்ச்சியாக நடித்தேன். பண தேவை இருந்ததால் தெரிந்தே சில விஷயங்களை செய்தேன். கவர்ச்சியாக நடித்தாலும் அதன் விளைவுகள் இவ்வளவு பெரிதாக இருக்கும் என எனக்கு தெரியாது. அந்த மெச்சூரிட்டி அப்போது என்னிடம் இல்லை, அதே நேரம் கேமரா ஆங்கிள் எனக்கு தெரியாது, எந்த ஆங்களில் கேமராவை வைத்து எடுத்தால், எது எப்படி தெரியும் என்ற விஷயம் அப்போது எனக்கு தெரியாது.

Sona Smoke interview
Photo Credit:

என் மைனஸ்: ஆனால், என்னை யாரும் கட்டாயப்படுத்தி கவர்ச்சியாக நடிக்க சொல்லவில்லை. சில ஆண்டுகளில் கவர்ச்சியில் நடிகை என்ற பெயர் மாறிவிடும் என நினைத்தேன். ஆனால், அந்தப் பெயர் மாறவே இல்லை. நானும் சீரியல் பக்கம் சென்று அம்மா ரோல் என கவர்ச்சியை தவிர்த்து விட்டு பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். ஆனால், கவர்ச்சி நடிகை என்கிற பெயர் மாறவே இல்லை. என்னுடைய உடம்பா, இல்லை பார்வையா ஏதோ ஒன்று கவர்ச்சியாக இருக்கிறது. அதுதான் என்னுடைய மைனஸ் என நான் நினைக்கிறேன் என சோனா அந்த பேட்டியில் மன வருத்தப்பட்டு பேசி உள்ளார்.

ஸ்மோக் வெப் சிரீஸ்: நடிகை சோனா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து 'ஸ்மோக்' என்கிற பெயரில் ஒரு வெப் தொடரை தயாரித்து உள்ளார். இதை ஷார்ட் பிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் சேர்ந்து தயாரித்து உள்ளார். இதில், சோனாவாக ஆஸ்தா அபே நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X