பணம் கேட்டா ரூமுக்கு வானு சொல்றாங்க.. கல்யாணத்திற்கு ஆசை பட்டேன்.. ஆனால், சோனா மனம் திறந்த பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து, தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வரும் சோனா, பல யூடியூப் சேனல்களுக்குத் தொடர்ந்து அதிரடியான பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் கவர்ச்சி நடிகையாக இருப்பதால், யாரிடம் சென்று அவசரத்திற்குக் கடனாகப் பணம் கேட்டாலும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று சினிமாவினுடைய இருண்ட பக்கத்தைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், சினிமாவில் எனக்குக் 'கவர்ச்சி நடிகை' என்ற பெயர் வரக்கூடாது என்பதற்காகப் பல இடங்களில் போராடினேன். அந்தப் பெயரை மாற்றுவதற்குக் கடுமையாகக் கஷ்டப்பட்டேன். நான் ஏன் அப்படி நினைத்தேன் என்றால், ஒரு நல்லவனைத் திருமணம் செய்துகொண்டு, மாமனார், மாமியார், குழந்தைகளோடு ஒரு சராசரிப் பெண்ணாக வாழ ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது எனக்கு எதுவுமே இல்லை என்று ஆன பிறகு, என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என்ற விரக்தி மனநிலைக்கு நான் வந்துவிட்டேன்.

ரூமுக்கு வா: கவர்ச்சி நடிகையாக இருப்பதால், நிஜ வாழ்க்கையிலும் இவள் அப்படித்தான் இருப்பாள் என்ற தவறான எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. எனக்குத் தெரிந்த மிக நெருக்கமான நண்பர் ஒருவர் இருக்கிறார், அவர் பெயரை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை. எனக்கு ஒருமுறை பணத்தேவை இருந்தபோது அவரிடம் உதவி கேட்டேன். அதற்கு அவர், நான் சொல்லும் ஹோட்டலுக்கு, ரூமுக்கு வந்துவிடு... நீ கேட்கும் பணத்தைத் தருகிறேன். அதற்கு இவ்வளவு வட்டி என்றார். பணம் கேட்டால் படுக்கைக்கு அழைப்பதுதான் இன்று கவர்ச்சி நடிகைகளுடைய உண்மையான நிலைமை.
உண்மை பேசுவதால் பிரச்சனை: தொடர்ந்து பேசிய, நான் போல்டாகவும், வெளிப்படையாகவும் பேசுவதனாலேயே பலவிதமான கோரப் பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறேன். சிறுவயதிலிருந்தே எப்பொழுதும் உண்மையைத்தான் பேச வேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அந்தப் பழக்கத்தால் பல இடங்கள் எனக்குப் பாதகமாக முடிந்தது. அதன் பிறகுதான் வெளிப்படையாகவும் உண்மையாகவும் எந்த விஷயத்தையும் பேசக்கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். ஆனாலும் எனக்குப் பொய் சொல்லத் தெரியவில்லை என்றார்.. நடிகை சோனா தற்போது 'ஸ்மோக்' (Smoke) என்ற புதிய வெப் தொடரை இயக்கி, இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்தத் தொடர் மிக விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications