ருத்ர தாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திருப்பாச்சி பட நடிகை !
சென்னை : தேசிய கீதம், திருப்பாச்சி போன்ற படத்தில் நடித்த நடிகை சௌம்யா காந்தி தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார்.
Recommended Video
ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் 7ஜி நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் படம் தான் ருத்ர தாண்டவம்.இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார் ஜூபின்.
அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவர தயாராக இருக்கும் இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார் .அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

ருத்ர தாண்டவம்
இயக்குனர் மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை,திரௌபதி போன்ற படங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் தான் ருத்ர தாண்டவம்.இப்படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கிறார் .மேலும் இந்த படத்தில் சௌம்யா காந்தி,ஷீலா ராஜ்குமார்,சௌந்தர்யா போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .சமீபத்தில் இப்படத்தின் ஸ்னீக் பீக் வெளி வந்து சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.அதில் போலியாக ஜாதி மதங்களை வைத்து பணம் பறிக்கும் கும்பலைப் பற்றி தெள்ளத்தெளிவாக காட்டப்பட்டுள்ளது. பணம் கொள்ளையடிப்பதற்காக எப்படி எல்லாம் நடிக்கிறார்கள் என்று அமைக்கப்பட்டுள்ளது அந்த காட்சி.

சர்ச்சை காட்சிகள்
ஏற்கனவே இவர் இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி போன்ற படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த படத்திலும் ஜாதி,மதம்,கௌதம் மேனன் பேசும் கெட்ட வார்த்தைகள் என்று சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமலேயே இருக்கின்றது. அதனாலேயே இப்பத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது .இந்த படத்தில் ஹீரோவான ரிச்சர்ட் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.அவருடன் இணைந்து சௌம்யா காந்தியும் போலீசாக நடித்துள்ளார்.தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள சௌம்யா காந்திக்கு இந்த படம் நல்ல திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பலாம்.

விஜய்யுடன் இணைந்து
பள்ளிப்பருவத்திலேயே நடிக்க தொடங்கிய இவருக்கு தேசிய கீதம் என்ற படம் தான் முதல் படம்.அதன் பிறகு மலையாள படங்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பிய இவருக்கு திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அண்ணன் தங்கை சென்டிமெண்ட்டுடன் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தான் திருப்பாச்சி.

முடி வெட்டும் காட்சி
நடிகர் விஜய் திருப்பாச்சியில் தங்கைக்காக எதுவும் செய்யும் அண்ணனாக நடித்திருப்பார்.அந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மல்லிகாவிற்கு பெரிய முடி இருக்கும்,அதனை யாருக்கும் தெரியாமல் வெட்டிவிடும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் சௌம்யா காந்தி. அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார்.
குத்து சண்டை
விளையாட்டு துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சௌம்யா காந்தி.தற்போது குத்து சண்டை வீராங்கனையாகவும் உள்ளார்.தேசிய அளவில் வெண்கல பதக்கமும்,வெள்ளி பதங்கங்களையும் பெற்றுள்ளார்.அதிக அளவில் உடல் பயிற்சி செய்யும் இவருக்கு ருத்ர தாண்டவம் படத்தில் கிடைத்த போலீஸ் கதாபாத்திரமும் நன்றாக பொருந்தியுள்ளது.இப்படம் வெளிவந்த பிறகு இவரது கதாபாத்திரம் பேசப்படுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் .


Click it and Unblock the Notifications











