போதைப் பொருள் விவகாரம்.. த்ரிஷாவும் நயன்தாராவும் ஏன் கப்சிப்னு இருக்காங்க? ஸ்ரீரெட்டி சொல்றதைக் கேட்டா பதறுதே!

சென்னை: மொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வரும் விஷயமாக மாறியுள்ளது கொக்கைன் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகம். இந்த விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து நீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி அளித்துள்ள பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார். மேலும் நடிகை த்ரிஷா மற்றும் நடிகை நயன்தாரா குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

குமுதம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " நான் மீ டூ விவகாரம் குறித்து பேசுகையில் என்னை பார்த்து பலரும் கேட்ட கேள்விகள், உனக்கு வாய்ப்பு வேண்டும் என்றுதானே அட்ஜெஸ்மெண்ட்க்கு சரினு சொல்லீட்டு போன. அப்படி இருக்கும்போது இப்ப வந்து எதுக்கு இப்படி சொல்லீட்டு இருக்க? நீ சம்மதம் தெரிவிக்காமல் அவர்கள் எப்படி உன்னை தொட முடியும்?.

நான் அட்ஜெஸ்மெண்ட்க்கு சரி எனச் சொன்னதற்கு காரணம், எனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும். எனது நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வர சினிமா உலகில் இதுதான் வழிமுறை என நினைத்துக் கொண்டேன். இன்றைக்கு பழைய நடிகைகள் தொடங்கி புது நடிகைகள் வரை பலருமே இப்படித்தான் பெரிய நடிகைகளாக உயர்ந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இது குறித்து யாரும் வெளியே பேசிக் கொள்ள மாட்டார்கள்.

Actress Sri Reddy Interview about Kollywood Drugs Issue She Questioned To Trisha And Nayanthara
Photo Credit:

த்ரிஷாவும் நயன்தாராவும்: த்ரிஷா மேடமாகட்டும், நயன்தாரா மேடமாகட்டும் மீ டூ விவகாரத்தில் ஒரு ட்வீட் கூட போடவில்லை. அட்ஜெஸ்மெண்ட் என்பது தவறு என்று கூட அவர்கள் பேசவில்லை. இப்போது தமிழ் சினிமா உலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டுள்ளது. த்ரிஷாவும் நயன்தாராவும் ஒரு ட்வீட் போட்டார்களா? அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு பிசினஸ்தான் முக்கியம். அவர்களின் கொள்கைகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

பொறுப்பு இருக்கா? : அவர்களுக்கு பணம், பிசினஸ், பெயர், புகழ் இதுதான் தேவை. ரசிகர்களையே பிசினஸாக தான் பார்ப்பார்கள். இதனாலே அவர்கள் கான்ட்ரவர்சி பிரச்னைக்குள் வர மாட்டார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு குடிமகனாக உங்களுக்கு சில பொறுப்புகள் உள்ளது. கெட்ட விஷயங்களுக்கு ஆதரவு தரக்கூடாது, நல்ல விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். லேடி சூப்பர் ஸ்டார் எனக் கூறப்படும் நயன்தாரா பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் குரல் கொடுப்பாரா? குறைந்த பட்சம் ஒரு ட்வீட் போடுவாரா? தனது ரசிகர்களுக்கு கூட போதைப் பழக்கத்திற்குள் போகாதீர்கள் என அறிவுரை வழங்குவாரா? இளைஞர்களும் போதைப் பொருட்களிடம் இருந்து விலகி இருங்கள் எனக் ஒரு டிவீட் போடுவாரா?

அமைதிக்கு காரணம் என்ன? : மிகவும் சின்ன நடிகராக இருக்கும் நானே இது போன்ற விஷயங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறேன். ஆனால் த்ரிஷாவும் நயன்தாராவும் ஏன் பெரிய நடிகர்களும் நடிகைகளுமே கூட, இது தொடர்பாக எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன? என நான் கேள்வி எழுப்புகிறேன்" எனக் கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X