செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ஸ்ரீரெட்டி.. சிக்கப் போவது யாரோ.. திக் திக்கில் தமிழ் சினிமா!
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்திக்க ஸ்ரீரெட்டி முடிவு செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
திரையுலகில் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை குறிப்பிட்டு குற்றம்சாட்டி தெலுங்கு திரையுலகை அதிரவைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.
தெலுங்கைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் தன்னை ஏமாற்றியவர்கள் என சிலரின் பெயர்களை அவர் அறிவித்து வருகிறார்.

சட்டப்படி நடவடிக்கை:
தமிழில் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், சுந்தர்.சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டுகளுக்கு உரிய சாட்சி இல்லையென்று கூறும் ஸ்ரீரெட்டி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை வருகை:
இதனால், அவர் அடுத்ததாக யாருடைய பெயரை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஊடகங்களுக்கு சிறப்புப் பேட்டி அளித்து வரும் ஸ்ரீரெட்டி நீதி கேட்டு சென்னை வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரபலம்?
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஸ்ரீரெட்டி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது அவர் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து யார் பெயர்?
ஸ்ரீரெட்டியின் இந்த செய்தியாளர் சந்திப்பு முடிவால், தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அவர் யார் பெயரையெல்லாம் கூறப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பில் சினிமாத் துறையினரும், மக்களும் காத்திருக்கின்றனர்.

நடிகர் சங்கம்:
இது ஒருபுறம் இருக்க, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீரெட்டி இது குறித்தும்கூட பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications