என் உதடு மறுத்துவிட்டது.. அன்று ஸ்ரீரெட்டி சொன்னது ஸ்ரீகாந்தை தானா? புயலை கிளப்பும் பழைய பேட்டி!
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், ஒரு கிராம் போதை பொருளை 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி உள்ளார். கோலிவுட் சினிமா வட்டாரத்தில் இது பேசு பொருளாகி இருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், நடிகை ஸ்ரீரெட்டி, ஒரு நடிகர் என்னை போதைப்பொருளை பயன்படுத்த கட்டாயப்படுத்தினார் என்று பேசிய வீடியோ தற்போது டிரெண்டாகி வரும் நிலையில், அந்த நடிகர் தான் ஸ்ரீகாந்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் நடந்த சண்டையின் பிரசாத் என்பவர் அந்த விடுதியில் போதை பொருள் சப்ளை செய்வதாக எழுந்த புகாரை அடுத்து போலீசார், பிரசாத்தை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர், பணமோசடி செய்திருப்பதும், போதை பொருள் சப்ளை செய்ததும் தெரியவந்ததை அடுத்து, அவரின் ஃபோனை போலீசார் அலசி ஆராய்ந்தனர். அதில், பிரதீப் என்பவரிடம் இருந்து பிரசாத் போதை பொருளை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

நடிகர் ஸ்ரீகாந்த்: இதைத் தொடர்ந்து போலீசார், பிரதீப்பை கைது செய்து விசாரித்ததில், அவர், நடிகர் ஸ்ரீகாந்த், ஸ்ரீ கிருஷ்ணா அவர்களுக்கும் போதை பொருளை சப்ளை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் ஸ்ரீகாந்தை நேற்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது விசாரணை நடத்தினார். மேலும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் கொகைன் என்ற போதை பொருளை உட்கொண்டது தெரியவந்ததை அடுத்த, நேற்று அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
நடிகை ஸ்ரீரெட்டி: இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டி, பல நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக அழைத்து, என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என புகார் கூறியிருந்தார். அந்த புகாரில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்தின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதுகுறித்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ரெட்டி, Red Pix 24x7 யூடியூப் தளத்தில் பேசி இருந்தார். அதில், சினிமாவில் பலரும் போதைக்கு அடிமையாகத்தான் இருக்கிறார்கள். நானும், மதுவிற்கு அடிமையாகத்தான் இருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தை அதை நிறுத்திவிட்டேன்.
உதட்டில் தடவினார்: இப்போது நான், ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றேன், அப்போது அங்கு இருந்த ஒருவர், போதை மருந்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தினார். எனக்கு அந்த பழக்கம் இல்லை என்று சொல்லி மறுத்தேன். ஆனால், அவர்கள் முடியவே முடியாது, என என்னை வலுக்கட்டாயமாக பயன்படுத்த சொன்னார்கள், அப்போதும் நான் மறுத்ததால், இங்கிருந்த நண்பர்கள் சிலர்,என் இரண்டு கால்களையும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்துக்கொண்டு, என் இரண்டு கைகளையும் இறுக்கமாக பிடித்துக்கொண்டனர். அப்போது, நான் வேண்டாம் என்று கத்தினேன். ஆனால், அவர்கள் என் உதட்டின் அடியில் கொக்கைனை தடவினார்கள். அடுத்த நொடியே என் உதடுகள் மறத்துபோனது, நான் எங்கிருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவே வில்லை. மறுநாள் மாலை வரை அந்த நிலையிலேயே இருந்தேன் என ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். தற்போது ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதாகி இருக்கும் நிலையில், ஸ்ரீ ரெட்டி சொன்ன நடிகர் இவர் தானா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











